கைப்பேசி திரையிலும்
தொலைக்காட்சி மாய பிம்பங்களிலும்
சுருண்டுக் கிடந்த
சொல் பேச்சு கேட்காத
பாழாய் போன மனசை
காலில் விலங்கு இட்டு
பெருநகரத்தின் பேருந்து நிலையத்தில்
பூட்டை அவிழ்த்துவிட்டேன்
உடம்புக்குள் வியர்வை பொங்காத வெயில்
காந்தத்தின் இழுப்புக்கு ஏற்றார் போல்
ஆடும்
தாளில் மேல் இருக்கும் இரும்பு துகள்களாய்
ஓவ்வொரு பேருந்துபின்னால்
ஓடி ஓடி மூச்சிரைக்க நிற்குது
சீப்பு கண்ணாடி விற்கும் பிஞ்சு பாதத்தில் மண்டியிட்டு அழுதது
கைக்குழந்தையுடன் வந்த தாயொருத்திற்கு சுமைகளை எடுத்துக் கொடுத்தது
வெள்ளரிபிஞ்சு மாங்க வாங்கிகொடுக்க கெஞ்சியது
ஜனங்கள் படும் துயரத்திலும் சின்னதாக அவதியுற்றது
அருளாசி வழங்கி தட்சனை பெற்றும்செல்லும்
திருநங்கை பின்னாலே சென்றது
அந்தி சாயந்து வெகு நேரமாகிவிட்டது
நான் தனி ஒருவனாய்……
No comments:
Post a Comment