Monday, October 23, 2023

மக்கள் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களின் பார்வையில் சோலைமாயவனின் கவிதை

மக்கள் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களின் பார்வையில் சோலைமாயவனின் கவிதை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன கடவுள் நீ...
*********************
      -சோலை மாயவன்.
அவரது 'வெயில் மேயும் நீர்ப்புலி ' தொகுப்பின் கவிதை இது.

            ஒரு பண்டிகை. விநாயக சதுர்த்தி.
ஊரெல்லாம் ஒலிக்கிறது அவர் புகழ்பாடும் பாடல்கள். கவிஞருக்கோ கனகோபம். கொண்டாட மாட்டேன் போ என்று பிள்ளையாரோடு மல்லுக்கட்டுகிறார்.

கருப்புச் சுண்டல் தரமாட்டேன்
சுவையான கொழுக்கட்டை கிடையாது

     என்று கடவுளிடம் அறிவிக்கிறார் கவிஞர்.ஏன்?

   எனக்காக எதைத்
   தருவித்தாய்?

எனக் கேட்டுவிட்டு,

    தூர்வாரப்பட்ட ஏரிகளில்
    வெயில் குடையென வளர்ந்திருக்கிறது
    உனைக் கரைத்த ஆறுகளில்
    லாரிகள் ஓடுவது உனக்கு
    வலிக்கவில்லையா?

எனக் கேட்கிறார். நமக்கு வலிக்கிறது.

   உன்னைக்
   குழைத்துக் குழைத்து உருவாக்க
   களிமண் கொண்டுவந்த நிலமெங்கும்
   மீத்தேன் தூக்குக்கயிற்றில்
   தொங்கிக்கிடக்கிறது

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாத கடவுளைப் பார்த்துத்தான் கேட்கிறார்

   என்ன கடவுள் நீ
   ஒன்றும் செய்யமுடியாத உனக்கா
   ஊரெங்கும் கொண்டாட்டங்கள்?

இந்த அபாரமான கவிதை, நாத்திகம் பேசவில்லை. அசலான ஆத்திகம் பேசுகிறது.

நிலம் பறிக்கப்படும் போது
நீர்நிலைகள் சூறையாடப்படும்போது
பேராசைப் பகாசுர நுகர்வுவெறி
இயற்கை வளங்களை வேட்டையாடும் போது, கண்டுகொள்ளாத கடவுள் /ஆன்மீகம் வெறும் சடங்கு என்பதைக் கோபத்தோடு முன்வைக்கிறது.

அப்பனின் பிணமெரிக்க
ஆற்றங்கரை போன மகன்
ஆற்றின் பிணம் கண்டான்
ஆற்றங்கரை மயானத்தில் என்பதாக

நதி என்றாலே சுடுகாடு நினைவுவரும் காலத்தில், ஆன்மீகம், கடவுள், அறநூல், நீதிநூல் இதற்கெல்லாம் என்ன பொருள்?

இதைத்தான் கேட்கிறது கவிதை.
இது காலத்தின் கேள்வி.
காலத்தின் கேள்வியைக் கேட்பதே
கவிதையின் வேள்வி ...
          ~~~கோ.கலியமூர்த்தி

Saturday, October 21, 2023

கூடல் தாரிக் கவிதையை முன் வைத்து

நமக்குத்தான்
கள்ளிச்செடி
பாலை நிலத்துக்கு
அதுதான் ரோஜா 
            ---கவிஞர் கூடல் தாரிக்
நிலவென்னும் நல்லாள் கவிதைத்தொகுப்பிலிருந்து 

--மூன்றாவது முறையாக வாசிக்கும் பொழுது வாசிக்கும் பொழுது இந்த கவிதை என் மனதை தைத்தது

--எல்லா பூக்களையும்  எல்லோரும் ரசிப்பதில்லை ஆனால்  எல்லா பூக்களையும் ரசிப்பதற்கும் ஒருவர் இருக்கதான் செய்கிறார்கள்

--இவ்வுலகில் சகல ஜீவராசிகள் வாழ்வதற்கான உரிமை இடம் உண்டு 

-எளிமையான வார்த்தைகள் தான் என்ற போதும்  மனிதர்களுக்கு தன்னம்பிக்கை தருகிற ஒரு கவிதையாக பார்க்கிறேன்

- நிறத்தால்/ சாதியால் /பணத்தால்/ அதிகார திமிரால்/நாம் புறக்கணிக்கப்படுகின்ற போது இந்த கவிதை நமக்கான ஒரு கிரியா சக்தியாக இயங்குகிறது

நாம் பணியாற்றும் அலுவலகங்களில்/நாம் பயணிக்கும் சமுதாயத்தில்/ யாருக்கும் நம்மை எதன் பொருட்டும்பிடிக்காமல் போகலாம் ஆனால் நம் வீட்டிற்கு நாம் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறோம் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு கதாநாயகனாக தெரிகிறோம் 
பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் யாரோ ஒருவருக்கு பயனுடையதாகவும் வாழ
நேருகிறது

--உதாசீனப்படுத்துவதும் அவமானப்படுத்துவம் பிறரால் புறக்கணிக்கப்படுவதும் மனித வாழ்வின் இன்னொரு பக்கம் அதற்காக நாம் வாழ்வை இழந்துவிடகூடாது என்பதை இந்தக் கவிதை முன்வைக்கும் ஒளி

         ---சோலைமாயவன்

Thursday, September 28, 2023

வெயில் மேயும் நீர்ப்புலி-விமர்சனம் கவிஞர் சாய்மீரா

காலத்தின் பக்கங்களில்
கவிதையெனும் ஆன்மா ...(சிறகு-31)
*******************************************√√

கவிஞர் சாய் மீரா  அவர்களின்
பார்வையில்

#கவிஞர்_சோலைமாயவன்
எழுதிய

#வெயில்_மேயும்_நீர்ப்புலி 
கவிதைத் தொகுப்பிலிருந்து

இந்த வாரத்திற்கான கவிதை
**********************************

மணிக்கு
நாற்பது கிலோ மீட்டர் ஓடும் கால்களைத்
தனியாருக்குத் தாரைவார்த்தேன்
கடுகளவு எழுத்தைக்கூட இமை சுருங்காமல் வாசிக்கும்
பட்டொளி வீசும் கண்களை
தனியாருக்குத் தானம் செய்தேன்
குண்டு குண்டாக எழுதுவதாக
அம்மா முத்தமிட்ட விரல்களைத்
தனியாருக்கு விற்பனை செய்தேன்
நாம் ஒருவர் நமக்கேன் இருவரென
ஒரு கிட்னியைத் தனியாருக்குத் தத்துக் கொடுத்தேன்
இணைப்பாக
கல்லீரலும் மண்ணீரலும் அனுப்பி வைத்தேன்
என் உடல் இயந்திரத்தின் உதிரிப் பாகங்கள்
ஒவ்வொன்றிலும்
தனியாரை ஊக்குவிக்கத் திறந்துவிட்டேன்
மரத்துக்கிடந்தன கால்கள்
பார்வை மங்கிப்போனது கண்களுக்கு
கிட்னி இதயமெல்லாம் சீரழிந்து சீழ்ப்பிடிப்பதற்குள்
ஆறேழு மாதங்கள் கடந்துவிட்டன
அட்டைப்பூச்சிகளாய்
என் தேசத்தில் கொழுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்
தனியார்.

# சோலை மாயவன்.

கவிஞரின் வெயில் மேயும் நீர்ப்புலி மொத்தமாக இந்தியத்திருநாட்டின்
இனியதொரு நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. யாரேனும் உங்கள் நாட்டின் நிலை அன்றிலிருந்து இன்று வரை எப்படியானது எனக் கேட்டால் அவர்கள் கையில் இப்புத்தகத்தை தாராளமாகத் தரலாம். இது அது வென எந்த பிரச்சனைகளையும் இப்புத்தகம் விட்டுவைக்கவில்லை. 

எம் பாரதத்திருநாட்டின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிற அழகினால் கோவணமும் கலைத்து அம்மணமாய் ஊர்வலம் வந்த உழவர்களின் அழகும் கூடிப்போயிருப்பதை இரும்பினால் எழுப்பப்பட்ட இன்முகச்சிரிப்போடு அந்த தலைவரின் சிலை பார்த்தபடியே உள்ளது. என்ன செய்ய வயலெல்லாம் ரோடு போட்ட பின் வேலையற்றவனாய் போன உழவன் தானே நடந்தால் என்ன?
லாபத்திற்கு பேராசைப்பட்டு தாய் மண்ணில் அடிமடி தனில் ஆயிரெத்தெட்டு விஷ மருந்துகளை கொட்டிக்கொட்டி கொட்டையில்லா கூமுட்டை கதிர்களை விளைவித்து எதிர்கால சந்ததியின் இரைப்பையில் புற்று வளர்த்து மரபணுவில் மாற்றம் செய்த புண்ணியவான்களும் அவர்கள் தானே. நடந்தால் என்ன? அவர்களே அத்தனை செய்யும் போது எரிவாயு எடுத்தால் தான் என்ன? 

இது என்வரையிலான பார்வை. நியூட்டனின் மூன்றாம் விதி மேல் நம்பிக்கை கொண்ட எனது பார்வை மட்டுமே. எவ்வொரு செயலையும் அதற்கு நேரெதிர் முனையில் நின்றும் பார்க்க வேண்டிய தேவையும் உள்ளது தானே.

எள்ளுத்தாத்தா, கொள்ளுத்தாத்தா காலத்திலிருந்து செய்த கொடுமைகளை கலைந்தெறிய எல்லாத்துறைகளிலும்
எல்லா தொழில்களிலும் முன்னேறும் நல்ல திறமையாளர்கள் முளைக்கத் துவங்கிவிட்ட இக்காலத்திலுங்கூட இரண்டு மயானங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை எண்ணி கவிஞர் வருத்தங்கொள்கிறார் அதுவும் சரி தான்.

புத்தகம் முழுவதும் அப்பட்டமான பல உண்மைகளை பூசி மழுப்பாமல் நிர்வாணமாய் நிறுத்தியிருந்த போது ஒரேயொரு பேருண்மை என்னை உடைத்து நிறுத்தவே அக்கவிதையை இங்கு எடுத்து வந்தேன். விரித்துச்சொல்ல வேண்டிய வேலையை கவிஞரே கையிலெடுத்து விட்டார். அதன் கருப்பொருளை மட்டுமே விரித்துப்பேச விருப்பங்கொள்கிறேன்.

தாயை விற்ற பிள்ளைகளை பார்த்தது உண்டா நீங்கள். வேகமாய் கண்ணாடியை பார்த்துக்கொள்ளுங்கள். நானுங்கூடத்தான். தாயை ஒப்ப நிலைத்த தாய் நாட்டை விற்றும் தீராத மகவுகள் தன் உறுதி நிறைந்த கால்களை மகிழுந்து குறுக்காக விற்றனர் பின் கண்களை கணிப்பொறியிலும் தொலைகாட்சியிலும் அலைபேசியிலும் தாரை வார்த்து பின் தன் விரல்களை தட்டச்சு பொறியிடமும் காணொளி விளையாட்டுகளுக்கும் தானமிட்டு பல்வேறு வகையான இரசாயனமிட்ட உணவுகளை உண்டு களித்து இரண்டு எதற்கென ஒரு கிட்னியை அளித்த பின் அதற்குத் துணையாய் கல்லீரலும் மண்ணீரலும் அனுப்பி வைத்தபின் காது மூக்கு தொண்டை முதல் கெண்டைக்கால் நரம்புகள் வரை இந்த மருந்து அந்த ஊட்டச்சத்து பானம் புதுப்புது நிறங்களில் மாத்திரைகள் பல்வேறு வகையான அழகூட்டிகள் நிறமூட்டிகளென எங்கோ இருக்கிற எவனோ ஒரு தனியார் முதலை வயிறும் பின்புறமும் செழித்து வளர நானே சீரழிந்தோம். 

ஆனாலுமென்ன உலகம் எங்கள் உள்ளங்கையிலென உச்சுக்கொட்டி வியந்து கொண்டு நிலவின் முதுகைப் பார்க்கிற ஆவலில் இதயத்தோடு மூளையையும் சமூக வலைதளங்களுக்கு உணவாய் பிய்த்தெறிந்த பின்னர் மரத்தே போய்விட்டன உடல்கள். 

அருவி எனும் திரைப்படத்தில் ஒரு நீண்ட வசனம் உண்டு சந்தோசமான வாழ்க்கைனா என்ன என்பதை அந்த படத்தின் கதாநாயகி ஒரே வசனத்தில் எடுத்துரைப்பார். அதன் மொத்த சாரத்தையும் ஒரே பத்தியில் எழுதிவிட்டார் கவிஞர். 

தானறியும் முன்னம் தன் குருதி உறிந்துதிரும் அட்டைப்பூச்சிகளாய் இந்த தனியார்கள் எம் தேசத்தாயின் உடல் முழுதும் நிறைந்திருப்பதே நிதர்சனமென நொந்து கொள்கிறார் கவிஞர்.

தூங்குபவர்களைத் தானே எழுப்ப முடியும் தூங்குவதை போல் நடிக்கும் உயர் மயிர்களையும் தூங்குவது நல்லது அதற்கு நாங்கள் கொடுப்பதையெல்லாம் நீங்கள் அப்படியே பெற்றுக்கொள்ளுங்களென தொடர்ந்து மனோவசியத்திலும் இலவச பணவசியத்திலும் ஆடை ஆபரணங்கள் அழகு அணிகலன்கள் படாடோபங்கள் பதிவி ஆசைகளென உயர் மயிர்களிடும் ரொட்டித்துண்டத்தை கவ்வித்திரிகிற தாய்நாட்டின் மீதிருந்த நன்றியைக்கொண்ற நம்மைப் போல நாய்களுக்கு எத்தனை அட்டைகள் மொய்த்து கொழுத்தாலும் வருத்தமில்லை.

என்ன செய்ய இதையும் ஒரு லைக் சேர் பார்வர்டு செய்து மிகப்பெரிய சமூகப் பொறுப்பை முடித்துவிடுகிற பெரும் காரியத்தை நாம் செய்கிறோமே. அதுவும்கூட சிலருக்கு கடினம் தான்.  மதிகெட்டு திரிகிற இந்நாடு மந்திகளுக்கானதும் மாட்டு மூளைகளுக்கானதும் தான்.

என்ன செய்ய எங்களுக்கு இணையத்தில் இணையற்ற வேலைகள் உள்ளனவே.

மிகுந்த சமூகப்பொருப்போடு இக்கவிதை நூலை வெளியிட்டிருக்கிற தோழர் சோலைமாயவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அருமையான படைப்பு. வெயில் மேயும் நீர்ப்புலி இந்த பாரதத்தின் கண்ணாடி.

சாய் மீரா.

Monday, September 25, 2023

ஒன்று மிகும் இடங்கள்

https://anandraghav.wordpress.com/#:~:text=%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%2C%E0%AE%9A,%E0%AE%A4%E0%AF%8D%2C%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87.

Friday, September 22, 2023

இலக்கணம் அறிவோம்

Lakshmi Manivannan அவர்களின்  முகநூல்பதிவில் இருந்த

நன்றி சார்

தவறில்லாமல் தமிழ் எழுத  60 குறிப்புகள் 

தமிழ் இலக்கணத்தை முழுமையாகப் படிக்க ஆர்வம்  இல்லாத ஆனால் தமிழ் எழுதும் ஆர்வம் 
உள்ளவர்களுக்காகச்  சுருக்கமான  குறிப்புகள் மூலம் தமிழில் பிழை இல்லாமல் எழுதக் 
கற்றுக்கொடுக்கும் முயற்சி இது. மாணவர்களின் மொழியில் சொன்னால் ‘ஒரு க்ராஷ் கோர்ஸ்’. 
நானும் மாணவன் தான். 

உங்களுக்கும் உதவலாம். 
 

பகுதி – 1 

a) ஒற்று மிகும் இடங்கள்- 5  – களத்தூர் கண்ணம்மா பிரிவுkalathur-kannamma 
b) ஒற்று மிகும் இடங்கள் – 11 – ராஜபார்வை பிரிவு 
Raja-Paarvai 
c) ஒற்று மிகா இடங்கள் – 11 – நாயகன் பிரிவு 
nayakan kamal 
d) ஒற்று மிகும்/ மிகா இடங்கள்- வேற்றுமை உருபுகள் – 8- விஸ்வரூபம் பிரிவு 
vishwaroopam kamal 
பகுதி – 2  அபூர்வ ராகங்கள் பிரிவு 
Apoorva-Raagangal-kamal 
பகுதி – 3 – சரி – தவறு  – ஆளவந்தான் பிரிவு 
aalvandhan 

பகுதி -1 
ஒற்று மிகும் இடங்கள் – பொது விதி 

1. க, ச, ட, த, ப, ற என்கிற வல்லின எழுத்துக்களோடு துவங்கும் வார்த்தைகளுக்கு முன்பு 
மட்டுமே ஒற்றெழுத்து வரும். இதில் ட, ற என்கிற எழுத்துக்களோடு பொதுவாக வார்த்தைகள் 
துவங்காது என்பதால் க, ச, த, ப மட்டுமே கவனிக்கவேண்டியவை. 

2. ஆகவே ஒற்று என்றால் க,ச,த,ப என்கிற வல்லின எழுத்துக்களின் வேர்களான க், ச், த், ப்   
என்ற நான்கு மெய்யெழுத்துகள் மட்டுமே. 

3. எனவே ஒற்று மிகும் இடங்கள் என்று இந்தப் பகுதியில் நாம் விவாதிக்கப்போவது இரண்டு 
வார்த்தைகளுக்கு இடையே ( முதல் வார்த்தை , இரண்டாம் வார்த்தை) க்,ச்,த்,ப் வரும் இடங்களை 
மட்டுமே. 

4. க, ச, த, ப என்ற எழுத்துக்களில் துவங்கும் சொல் வருமொழியாக ( The following 
word) இருந்தால் மட்டுமே முறையே க், ச், த், ப், ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும். க என்றால் 
– ‘க’ முதல் ‘கௌ’ வரை, இவ்வாறே ச, த, ப என்னும் எழுத்துகளுக்கும். 
புரிந்ததா…  சரி முதல் பிரிவுக்குப் போவோம் 

 
 
“ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். ” 
அதாவது முதல் வார்த்தை ஓரெழுத்துச் சொல்லாய் இருந்து,  இரண்டாம் வார்த்தை  க, ச, த, ப   
ஆகிய வல்லின எழுத்துக்களில்  ஆரம்பித்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப்  ஆகிய ஒற்று 
மிகும். 
உதாரணங்கள் : 
  பூ+பறித்தாள் – பூப்பறித்தாள் 
  தீ+ பிடித்தது – தீப்பிடித்தது 
  கை+ குழந்தை – கைக்குழந்தை 

விதி – 2 

”அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய எண்களுக்குப் பின்னல் மட்டும் ஒற்று மிகும்.” மற்ற 
எண்களுக்கு மிகாது. 
அதாவது முதல் வார்த்தை அரை, பாதி, எட்டு , பத்து என்று முடிந்து அடுத்த வார்த்தை க, 
ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணம் : அரைப்பக்கம், பாதித் துணி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, எட்டுக்கட்டுகள், 
பத்துச்செய்யுள்கள். 

விதி – 3 

தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்னால் ஒற்று மிகும் 
அதாவது முதல் வார்த்தை தமிழ் மாதங்களின் பெயராய் இருந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணம் : தைப் பொங்கல், ஆடிப் பட்டம், மார்கழித் திங்கள் 

விதி 4 

தனி எழுத்தும் ( குற்றெழுத்து) அதனுடன் இணைந்து “ஆ” என்ற ஓசையுடன் முடிகிற 
வார்த்தையின் பின்னால் ஒற்று மிகும். 
அதாவது ஒரு தனி எழுத்தும் ஆ என்கிற ஓசையுள்ள எழுத்தும் கொண்ட வார்த்தை முதலில் வந்து, 
அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இரண்டுக்கும் இடையே 
க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : கனாக்கண்டேன், ( கனா + கண்டேன்) சுறாத்தலை ( சுறா + தலை) நிலாப்பயணம் ( 
நிலா + பயணம்) 

விதி – 5 

அ, இ, எ + அந்த, இந்த, எந்த, + அங்கு இங்கு, எங்கு, +அப்படி, இப்படி, எப்படி, 
+அவ்வகை, இவ்வகை, எவ்வகை, + அத்துணை, இத்துணை, எத்துணை முதலிய சொற்கள்  முதல் சொல்லாக 
இருந்து “க, ச, த, ப”  ஆகிய எழுத்துக்கள் கொண்ட சொல் பின்னால் வந்தால் இரண்டுக்கும் 
இடையே  க், ச், த், ப்  ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள்: 
அக்குடம், இச்செடி, எப்பக்கம் 
  அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம் 
  அங்குச் சென்றான், இங்குப் போகாதே, எங்குக் கேட்டாய் 
  அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய் 

பகுதி – 2   ஒற்று மிகும் இடங்கள் 

விதி – 6 

திரு, நடு, முழு, விழு, பொது, அணு, புது, ஆகிய    இச்சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். 
அதாவது முதல் வார்த்தை மேற்கண்ட வார்த்தைகளா இருந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : திருக்கோயில், நடுத்தெரு, முழுப்பேச்சு, விழுப்பொருள், பொதுப்பணி, 
புதுக்கல்வி, அணுக்குண்டு ( யெஸ் யுவர் ஆனர்.. நாம அப்படிச் சொல்றதில்லையே தவிர 
அணுக்குண்டுதான் இலக்கணப்படி சரி) 
முழுசா ’உ’ என்கிற ஓசையோடு முடியற இந்த வார்த்தைகளுக்கு இலக்கண ரீதியான பெயர்   
முற்றியலுகரம். 

விதி – 7 

  முக்கியமான விதி இது. 
சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வந்தால் ஒற்று மிகும். இந்தச் 
சொற்கள் – கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும். இதற்கு குற்றியலுகரம் 
என்று பெயர். 
இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் வல்லின மெய் 
எழுத்துக்களான க், ச், ட், த், ப், ற்  வரவேண்டும் என்பது இரண்டாவது அவசியம். இப்படி 
வந்தால் அதற்கு வன் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர் 

உதாரணங்கள் : 
  மக்கு, தச்சு, செத்து, உப்பு, கற்று போன்ற சொற்கள். 
ஆக, இந்த விதியை இலக்கண முறையில் சொல்லவேண்டுமென்றால் ; 
”வன் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முதலில் வந்து, ‘க,ச,த,ப எழுத்துகளோடு துவங்கும் 
சொற்கள் பின்னால் வந்தால் இரண்டுக்கும் இடையே ஒற்று மிகும்.” 
உதாரணங்கள் : 
  மக்குப் பையன் 
  தச்சுத் தொழில் 
  உப்புக் கடை 
  விட்டுச் சென்றார் 

விதி – 8 

ஏழாம் விதியின் விதிவிலக்கு இது. 
வன் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமல்லாமல்  விதிவிலக்காய் ஒரு சில மென் தொடர்க் 
குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் ஒற்று மிகும். 
அதாவது சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வரும். இந்தச் சொற்கள் 
– கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும். 
இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் மெல்லின மெய் எழுத்துக்கள் 
வந்தால் அதற்கு மென் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர். 

அதைத் தொடர்ந்து பின்னால் வரும் வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் 
துவங்கினால் முறையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள்:  பாம்புத் தோல்,  குரங்குக் கூட்டம்,  கன்றுக்குட்டி , மருந்துக்கடை 

விதி – 9 

’அ’ அல்லது ‘இ’ ன்னு முடியற வார்த்தைக்குப் பின்னால ஒற்று மிகும். 
உதாரணம் – தேடிப் போனார், மெல்லச் சொன்னார், தேடிச் சென்றார், வாடிப் போயிற்று. 
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘அ’ அல்லது ‘இ’ சவுண்டோட முடிஞ்சி அதுக்குப் பின்னால 
வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற ஒற்று 
மிகும். 
இதுல கவனிச்சீங்கன்னா ரெண்டாவது வார்த்தை எல்லாம் போனார், சொன்னார், சென்றார், போயிற்று 
அப்பிடின்னு எல்லாம் வினைச் சொல்லா (Verb) இருக்கு. 
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் தேடி, மெல்ல, வாடி அப்படின்னு பாதியிலேயே நிக்குது. 
பின்னால வர்ற வினைச் சொல்லோட சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதெல்லாம் Dependent 
Verb- அது பேரு ”வினை எச்சம்.” 
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘அ’ அல்லது ‘இ’ என்ற ஓசையோடு முடிகிற வினை எச்சத்தின் 
(அகர இகர ஈற்று வினையெச்சம்) பின்னால் ஒற்று மிகும். 

விதி – 10 

”ஆய், போய், ஆக, போக, ” அப்படின்னு முடியற வார்த்தைகளுக்குப்பின்னால் ஒற்று மிகும் 
உதாரணம் : கேட்பதாய்க்கூறினான், ( கேட்பதாய் + கூறினான்) சொன்னதாய்ச்சொல்,( சொன்னதாய் + 
சொல்) போய்த்தேடினார், ( போய் + தேடினார்) இருப்பதாகக்கூறு.( இருப்பதாக + கூறு) 
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிஞ்சி, அதுக்குப் 
பின்னால வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற 
ஒற்று மிகும். 
இதுலயும் முந்தய விதி மாதிரி ரெண்டாவது வார்த்தை எல்லாம் ‘ கூறினான், தேடினார்’ 
அப்பிடின்னு வினைச் சொல்லா (Verb) இருக்கு பாருங்க. 
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் பாதியிலேயே நிக்குது. பின்னால வர்ற வினைச் சொல்லோட 
சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதாவது Dependent Verb- நேற்றைய விதி மாதிரி 
இதுவும் ”வினை எச்சம்.” 
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிகிற வினை எச்சத்தின் 
பின் ஒற்று மிகும். 

விதி – 11 

ய், ர், ழ் என்கிற எழுத்துகளோடு முதல் வார்த்தை முடிந்து இரண்டாவது வார்த்தை க, ச, த, 
ப  என்கிற எழுத்துக்களில் துவங்குகிற பெயர்ச்சொல்லாக (Noun) இருந்தால்  இரண்டுக்கும் 
இடையே க், ச், த், ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் :: 

மோர்க்குழம்பு, ( மோர் + குழம்பு) தாய்ப் பாசம், ( தாய் + பாசம்) போர்க் களம், ( போர் + 
களம்) தமிழ்ச் செயலி, தமிழ்த் தாய். ( தமிழ் + தாய்) 

விதி – 12 

முதல்ல உதாரணத்தைப் பாக்கலாம் : தங்கத் தாமரை, வெள்ளைப் புறா 
தங்கம், வெள்ளை இதெல்லாம் என்ன ? தாமரை , புறா இவற்றின் பண்புகள். 
தங்கத்தால் ஆகிய தாமரை, வெள்ளையான புறா. 
அதனால இதுக்கு ‘ பண்புத் தொகை’ ன்னு பெயர். 
அதாவது முதல் வார்த்தை ஒரு பண்பை உணர்த்தி,  இரண்டாம் வார்த்தை க, ச, த, ப  ஆகிய 
வல்லின எழுத்துக்களில் துவங்கினால் இரண்டுக்கும் இடையில் க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்து மிகும் 
தொகைன்னா  என்னா ? 
தங்கத்தால் ஆகிய தாமரை,   வெள்ளையான தாள்  என்கிற வார்த்தைகளில் ’ஆல்’ ‘ ஆன’   
அப்படிங்கற வார்த்தைகள் மறைஞ்சி இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ 
தொகை’ அப்படின்னு பேரு. அவ்வளதான் சமாச்சாரம். 

விதி – 13 

உதாரணம் – மல்லிகைப்பூ ( மல்லிகை + பூ) 
பூ என்பது பொதுப் பெயர். மல்லிகை சிறப்புப்பெயர். இரண்டும் ‘பூ’ வுடன் 
தொடர்புடையதுதான். மல்லிகைன்னு சொன்னாலே பூ தான். இப்படி இரண்டு பண்புகளைக் கொண்ட 
சொற்களுக்கு  ’இருபெயரொட்டுப் பண்புத் தொகை.’ ன்னு பேரு. 
இங்கே இரண்டாம் வார்த்தை  க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால்  க், ச் த், 
ப், ஆகிய ஒற்று மிகும். 
இன்னும் சில உதாரணங்கள் : கோடைக்காலம், மல்லிகைப்பூ, மழைக்காலம், செவ்வந்திப்பூக்கள் 

விதி – 14 

உவமைகள் வர்ற இடங்களிலே ஒற்று மிகும் 
உதாரணம் : தாமரைக்கண் ( தாமரை + கண்), முத்துப்பல் ( முத்து + பல்) தாமரையைப் போல 
இருக்கற கண் , முத்து மாதிரி இருக்கற பல். 
அதாவது முதல் வார்த்தை ஒரு உவமையா இருந்து இரண்டாவது வார்த்தையா க,ச,த,ப  ஆகிய 
வல்லின எழுத்து வந்தா  இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
இலக்கண ரீதியா சொல்லணும்னா “ உவமைத் தொகையில் ஒற்று மிகும்” 
தொகைன்னா  என்னான்னு உங்களுக்குத் தெரியும்.. 
தாமரை போன்ற கண், முத்து போன்ற பல்  அப்படிங்கறதுல  ”போன்ற” அப்படிங்கற வார்த்தை மறைஞ்சி 
இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ தொகை’ அப்படின்னு பேரு. 
இன்னொண்ணு.  உவமை மறையாமல் வந்தாலும் ஒற்று மிகும் 
உதாரணம் : மயில் போலப் பொண்ணு ஒண்ணு. 

விதி 15 

ட, ற  என்று முடியும் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும் 
முதல் வார்த்தை ட, டு ஆகிய எழுத்துக்களுடன் முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : 
தமிழ்நாடு + கலை = தமிழ்நாட்டுக்கலை 
வீடு + சோறு  = வீட்டுச் சோறு 
ஆறு + தண்ணீர் = ஆற்றுத்தண்ணீர் 
கிணறு + தவளை = கிணற்றுத் தவளை 

விதி – 16 

ஊர்ப்பெயர்களை அடுத்து கட்டாயம் ஒற்று மிகும். 
அதாவது ஊர்ப்பெயர் முதல் வார்த்தையாய் இருந்து இரண்டாம் வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின 
எழுத்துக்களோடு துவங்கினால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும். 
சென்னைக் கடற்கரை. குமரிக்கடல். திருச்சிக் காவிரி. 

 

பகுதி – 3 – ஒற்று மிகா இடங்கள்
  

விதி – 17 

பெயரெச்சங்களின் ( Relative Verbal Form) பின் ஒற்று மிகாது. 
உதாரணம் : உறங்கிய பையன் – உறங்கிய என்பது குறைந்த வினைச்சொல். அதனால் அது எச்சம் 
எனப்படும். உறங்கிய என்னும் எச்சம் பையன் என்ற பெயரைச் சார்ந்திருப்பதால் அது பெயரெச்சம் 
எனப்படும். 
இங்கே உறங்கிய என்ற பெயரெச்சத்திற்குப் பின் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்கள் வந்தாலும் 
ஒற்று மிகாது. 
மேலும் உதாரணங்கள் : படித்த பையன், ஓடுகிற குதிரை, பெரிய பெட்டி, நல்ல பாம்பு, நல்ல 
குழந்தை. 

விதி – 18 

விதி எண் 17 இல் பெயரெச்சத்தின் பின் ஒற்று மிகாது என்று பார்த்தோமில்லையா ? இன்னைக்கு 
அதோட விதிவிலக்கு விதி பார்ப்போம் 
”ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் ஒற்று மிகும்.” 
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் – இதுக்கு பல்லு விளக்காம ஈறு கேட்டுப்போயிருந்தா 
எதிர்ல இருக்கறவங்க மேல பேசும்போது எச்சை தெறிக்கும்ங்கறாமாதிரி தோணினாலும் அதற்கு 
கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்சம் என்று அர்த்தம். ஈறு ( இறுதி) கெட்ட ( 
மறைந்த)  எதிர்மறை ( opposite) பெயரச்சம் (Relative Verbal form) – 
அதாவது சொல்லின் இறுதியில் கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்ச சொற்கள் வந்து, 
இரண்டாவது வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்தோடு ஆரம்பித்தால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய 
ஒற்று மிகும். 
உதாரணம் : 
அறியா + பிள்ளை = இந்த வார்த்தையின் முழுவடிவம் ”அறியாத பிள்ளை”  ஆனால் அறியாத வின் 
இறுதியில் “த” மறைந்திருக்கிறது. அதனால் இங்கே ஒற்று மிகுந்து அறியாப் பிள்ளை என்று வரும் 
தீரா + துன்பம் = தீராத  என்பது முழுமையான சொல். அதில் த கெட்டிருக்கிறது. அதனால் 
தீராத்துன்பம் என்று ஒற்றுமிகும். 
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அப்படிங்கற பயமுறுத்துகிற சொற்பிரயோகத்துக்குப் பின்னால் 
எவ்வளவு எளிதான விதி ஒளிந்திருக்கிறது பாருங்கள். 
தமிழ் இலக்கணம்  கீதே அது சொம்மா பிலிம் காட்ற மெட்ராஸ் ரவுடி மாதிரி. பயந்து ஒளிஞ்சா 
நாம அம்பேல் ஆயிருவோம். தம் கட்டி எய்த்து நிக்கணும். ”தட்னா தாராந்துரும். 

விதி – 19
 
அது, இது, எது, 
அவை, இவை, எவை, 
அன்று, இன்று, என்று, 
அத்தனை, இத்தனை, எத்தனை, 
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, 
அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு 
போன்ற சொற்களுக்குப் பின் ஒற்றெழுத்து மிகாது. 
உதாரணங்கள் : அது பெரியது,  இவை சென்றன , எத்தனை பூக்கள், அவ்வளவு பருப்பு, இவ்வாறு 
கூறினான். 

விதி 20 

இரு வட மொழிச் சொற்கள் சேர்ந்து வரும்தொடர்களில் வலி மிகாது 
ஆதிபகவன், தேசபக்தி 

விதி – 21 

ஆ, ஓ, யா என்னும் கேள்வி கேட்கும் வினாக்களுக்குப் பின் வலி மிகாது. 
உதாரணங்கள் : அவனா போனான் ? அவனா சொன்னான் இருக்காது ? தம்பியோ கேட்கிறான். 

விதி – 22 

வினைத்தொகையில் ஒற்று மிகாது. 
உதாரணம் : சுடுகாடு 
வினைச் சொல்லின் பகுதியும்( சுடு- சுடுகின்ற) பெயர்ச்சொல்லும் ( காடு) சேர்ந்து 
பெயரெச்சத் தொடர் போல வருவது வினைத்தொகை 
இன்னும் சில உதாரணங்கள் :  உரைகல், குடிதண்ணீர், 

விதி – 23 
வெற்றிலை பாக்கு 
சொல்லிப்பாத்தா வெற்றிலைப் பாக்கு ன்னு வரணும் போல தோணுதில்ல ? ஆனா இங்க ஒற்று மிகாது. 
வெற்றிலை பாக்கு அப்படிங்கறதை முழுமையாகச் சொன்னால் வெற்றிலையும் பாக்கும் அப்படின்னு 
வரும். இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது. அப்படி மறைந்தால் அங்கே ஒற்று மிகாது. அதாவது 
இரண்டு பொருள்களை பட்டியலிட்டு அதில் உம் என்ற வார்த்தை வராமல் மறைந்தால் அங்கே ஒற்று மிகாது. 
இதுக்கு இலக்கண ரீதியா ‘ உம்மைத் தொகைன்னு பேரு. தொகைன்னா மறைஞ்சி இருக்கறதுன்னு. 
இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது. 
உதாரணங்கள் : இட்டிலி சாம்பார், யானை குதிரை 

விதி – 24 
அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி இரண்டிலேயும் ஒற்று மிகாது. 
அடுக்குத் தொடர் உதாரணம் – மெல்ல மெல்ல, தாவி தாவி – இந்த தொடரில் இருக்கும் இரண்டு 
வார்த்தைகளை பிரித்தாலும் பொருள் வரும். 
இரட்டைக் கிளவி அப்படி இல்ல. பிரித்தால் பொருள் வராது. ஜீன்ஸ் படப் பாட்டு கேட்டிருப்பீங்க. 
உதாரணம் – சல சல என்று ஓடிய தண்ணீர், விறு விறு என்று நடந்தான், 
அடுக்குத் தொடரோ  இரட்டைக் கிளவியோ இரண்டிலும் ஒற்று மிகாது. 

விதி – 25 
சிறு, சிறிய , பெரிய  ஆகிய சொற்களுக்குப் பின் ஒற்று மிகாது 
சிறு துரும்பு, சிறிய சிக்கல், பெரிய கொடுமை 

விதி – 26 

இன்னைக்கு டாஸ்மாக் விதி – ’கள்’  சேர்ந்தால் உடம்பு வலி மிகாதது போல 
(வன்தொடர்க் குற்றியலுகரச்) சொற்களின் பின் “ கள்” “  என்னும் விகுதி சேரும்போது ’க்’ 
என்கிற ஒற்று  மிகுதல் அவசியமில்லை. 
உதாரணங்கள் : வாக்குகள், வாழ்த்துகள், தோப்புகள், எழுத்துகள், 

விதி 27 

உபரி விதிகளை இங்கே ஒன்றாய்ப் போட்டிருக்கிறேன். 
* கூப்பிடுகின்ற விளிப்பெயரின் பின் (விளித்தொடர்) ஒற்று மிகாது 
உதாரணம் : தம்பி போ. ! தம்பி பார். 
* ஏவல் வினைமுற்றின் ( Imperitive Verb) பின்னும் ஒற்று மிகாது 
உதா : போ தம்பி 
* வியங்கோள் வினை முற்று ( optative verb) பின் ஒற்று மிகாது. இது மரியாதையாய் 
கட்டளையிட, சபிக்க, வாழ்த்த, வேண்டிக்கொள்ள பயன்படும். 
உதா : வீழ்க கொடுமை 
* வினைமுற்றுத் தொடரின் பின் ஒற்று மிகாது 
உதா : பாடியது பறவை 
* முன்னிலை வினைமுற்றின் பின் ஒற்று மிகாது 
வருதி குமர 
* முற்றுவினைக்குப் பின் பின் வலி மிகாது- 
வாரா குதிரைகள். 

பகுதி – 3 – ஒற்று மிகும்/மிகா இடங்கள் 
 

விதி – 28 

எழுவாய்த் தொடரில் ஒற்று மிகாது. (  முதலாம் வேற்றுமை உருபு) 
எழுவாய் அப்படின்னா ? 
ஒரு வாக்கியத்தின் அமைப்பில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை : 
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள். 
யார் செய்தது என்ற கேள்விக்கு விடையளிப்பது – எழுவாய் 
என்ன செயல் செய்யப்பட்டது என்பதற்கு விடை தருவது – பயனிலை 
எதைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடை தருவது – செயப்படுபொருள் 
உதாரணம் ;  கமலஹாசன் கோயில் சென்றார், 
கமலஹாசன் – எழுவாய் 
சென்றார் –  பயனிலை 
கோயில் – செயப்படுபொருள் 
இது போன்ற எழுவாய்த் தொடரில், இரண்டாம் வார்த்தை க,ச,த,ப என்று துவங்கினாலும் ஒற்று மிகாது. 
உதாரணங்கள் : 
துணி கிழிந்தது 
கிளி பேசியது 
கோழி கூவியது 
நாய் தின்றது 

விதி – 29 

‘ஐ’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். ( இரண்டாம் வேற்றுமை 
உருபு) 
அதாவது முதல் வார்த்தை ’ஐ’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் :   பூனையைப் பார்த்தான், உன்னைக் கேட்டால்,  அவனைப் பிடித்தால் 
இதுக்கு விதிவிலக்கு ஒண்ணு இருக்கு. முரளி போடற தூஸ்ரா போல. 
‘ஐ’ மறைஞ்சி வந்தா ஒற்று மிகாது. 
உதாரணம் –  மான் கண்டேன். 
மானை+ கண்டேன் அப்படின்னு எழுதாம, மான் கண்டேன்னு எழுதினா அப்ப ஒற்று வராது. அதே போல 
மயிலைக் கண்டேன், மயில் கண்டேன், 
ஓக்கேவா ? 
ஐ.. அதுக்குள்ள சந்தோஷப்பட்டா எப்பிடி.. இன்னும் இருக்கு. இது தீஸ்ரா. 
சில சமயம் ’ ஐ’ மறைந்து அதோட சில வார்த்தைகளும் கூட மறைந்து வரும். உதாரணம் தண்ணீர்த் 
தொட்டி.  அதாவது தண்ணீரை உடைய தொட்டி.  இங்க ஐ மட்டும் இல்லாம ‘உடைய’ அப்படிங்கற 
வார்த்தையும் மறைந்திருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அங்க ஒற்று மிகும். 
இன்னொரு உதாரணம் : 
யானை + பாகன் அதாவது யானையை ஓட்டும் பாகன் = யானைப் பாகன் 
இங்க ஐ மறைஞ்சிருக்கு கூடவே ஓட்டும் என்கிற வார்த்தையும் மறைஞ்சிருக்கு பாருங்க. 
இன்னும் சில உதாரணங்கள் : 
தேர்ப் பாகன் ( தேரை ஓட்டும் பாகன்) தயிர்க்குடம், ( தயிரை உடைய குடம்) காய்கறிக்கடை, 
சிற்றுண்டிச்சாலை.. 
இலக்கண ரீதியா இதுக்கு ‘உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை ” அப்படின்னு பேர்.  அதாவது 
உருபும் ( ஐ) அதோட பயனும் (உடைய) இரண்டும் தொக்க (இணைந்து) தொகை ( மறைந்து வருவது) 
என்ன..?  ரொம்ப பேஜாரா இருந்தா இலக்கணரீதியான வரியை மறந்துடுங்க. 

விதி – 30 

‘கு’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். (நான்காம் வேற்றுமை 
உருபு.) 
அதாவது முதல் வார்த்தை ’கு’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : அவனுக்குத் தா , கடைக்குப் போனான் 
இதிலயும் ஒரு தூஸ்ரா 
’கு’ மறைஞ்சு வந்தா,   அஃறினைப் பெயர்கள் முதல் வார்த்தையா இருந்தா மட்டும்தான் ஒற்று 
மிகும்.  உயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது. 
உதாரணம் : வேலி+ கால் = வேலிக்கால் 
இங்கே வேலிக்குக் கால். ‘கு’ மறைஞ்சு வந்திருக்கு. வேலி அஃறிணைப் பெயர். அதனால ஒற்று 
மிகும் 
உயர்திணை உதாரணம் : பொன்னி + கணவன் அதாவது பொன்னிக்குக் கணவன் என்பதை பொன்னி கணவன் 
என்று எழுதினால் ஒற்று மிகாது 
இப்ப தீஸ்ரா 
’கு’ என்கிற உருபும் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று 
மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் : குழந்தை+பால் = குழந்தைப் பால்  கோழி+தீனி = கோழித் தீனி 

விதி – 31 

ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது 
(மூன்றாம் வேற்றுமை உருபு) 
உதாரணம் – கத்தியால் குத்தினான், அவனோடு சுத்தினான். 
ஆனால்  ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய 
வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் :  வெள்ளித் தட்டு, பட்டுச் சேலை ( வெள்ளியால் செய்யப்பட்ட தட்டு, பட்டால் 
நெய்யப்பட்ட சேலை) பித்தளைக் குடம், மோர்க்குழம்பு 

விதி – 32 

இல், இன், இருந்து ஆகிய வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது 
(ஐந்தாம் வேற்றுமை உருபு) 
உதாரணம் : தாய்மொழியில் கூறு 
இல் இன் இரண்டும் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது 
தாய்மொழி கூறு 
ஆனால்  இல், இன், இருந்து  ஆகிய உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய 
வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் :  பழச்சாறு ( பழத்தில் பிழிந்த சாறு) 

விதி – 33 

‘அது, ஆது,  உடைய ஆகிய வார்த்தைகள் முதல் வார்த்தையின்  இறுதியில் வந்தால் ஒற்று 
மிகாது (ஆறாம் வேற்றுமை உருபு) 
உதாரணங்கள் : நண்பனது கட்டில், என்னுடைய கைகள் 
இந்த உருபுகள் மறைந்து வந்து ( வேற்றுமைத் தொகை) முதலில் வரும் சொல் அஃறிணையாய் 
இருந்தால் மட்டும் வலி மிகும். அதாவது- முதலில் வரும் சொல், உருபுகள் மறைந்திருக்கும் 
அஃறிணைச் சொல்லாய் இருந்து பின் வரும் சொல் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்களின் 
துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும் 
உதாரணம் : கிளிப்பேச்சு ( கிளியினது பேச்சு) குருவித்தலை, கிளிக்கூடு, நாய்க்குட்டி 

விதி – 34 

கண், இடம்- என்று முடியும் வார்த்தைகளுக்குப் பிறகு ஒற்று மிகாது (ஏழாம் வேற்றுமை உருபுகள்) 
உதாரணம் : மலையின்கண் திரிவோர். 
இந்த உருபுகள் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது 
உதாரணம் : மலை திரிவோர் 
ஆனால் இந்த உருபுகள் மறைந்து, இதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்து வந்தால் 
ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் : மலைக்கோவில் ( மலையின் கண் எழுந்த கோவில்) 

விதி – 35 

அழைப்பது அல்லது விளிப்பது போல வரும் சொல் இது. இந்த ”விளி வேற்றுமை” க்கு ஒற்று 
மிகாது. (எட்டாம் வேற்றுமை உருபு) 
உதாரணம் : தலைவா போதும், அம்மா பாடு 

பகுதி -2  
 

குறிப்பு – 36 
பழக்கம், வழக்கம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ? 
ஒருவர் தன் அளவில் தனி மனிதனாய் ஏற்படுத்திக்கொள்வது- ’பழக்கம்’ 
ஒரு சமுதாயமாய், ஊராய் நாடாய் செய்வது வழக்கம் 
காலையில எழுந்ததும் பல்லு விளக்காம காபி சாப்படறது என் ‘பழக்கம்’. 
ஒவ்வொரு தேர்ந்தலிலும் அரசியல்வாதிகள் சொல்வதை நம்பி ஏமாந்து ஓட்டுப் போடுவது மக்களின் 
வழக்கம். 

குறிப்பு -37 

முதலிய,  ஆகிய, போன்ற – இந்தச்  சொற்களின் பயன்பாட்டில் வித்தியாசம் என்ன ? 
எதையாவது பட்டியல் இடும்போது அது முழுமையான பட்டியலாக இல்லாவிட்டால் முதலிய என்கிற 
வார்த்தைப் பிரயோகம் வரும். 
பட்டியல் முழுமையானதாய் இருந்தால் ‘ஆகிய’ வரும். 
போன்ற என்ற வார்த்தை, அதற்கு முன்னால் சொல்லப்பட்டவை  அதன் உவமையாகவோ, நிகரானவைகளைச் 
சுட்டிக்காட்டப்  பயன்படும். 

உதாரணம் : 
1. மன்மோகன் சிங், நரசிம்ம ராவ், வாஜ்பாய் முதலியோர் இந்தியாவின் திறமையான பிரதம 
மந்திரிகளாய் இருந்தார்கள். ( இவர்களைத் தவிர இன்னும் சிலரும் திறமையான  பிரதமர்களாய் 
இருந்தார்கள் என்று அர்த்தம்) 
1. முதலமைச்சர் பதவியிலிருந்த லாலு யாதவ், ஓம் பிரகாஷ் சௌத்தாலா, ஷிபு சோரன், மது 
கோடா, எடியுரப்பா, பிரகாஷ் சிங் பாதல், ஜெயலலிதா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகச் 
சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள். ( இவர்களைத் தவிர வேறு எந்த முதலமைச்சரும் சிறைத்தண்டனை 
அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்) 
1. காந்தி , காமராஜ் போன்ற அரசியல்வாதிகள் இனி இந்திய அரசியலில் கிடைக்கமாட்டார்கள். 

குறிப்பு  38 

ஓரு &  ஓர் 
சொல் உயிரெழுத்தில் துவங்கினால் ஓர் வரவேண்டும். 
இல்லையென்றால் ஒரு. 
உதாரணங்கள் :  ஓர் உதவி, ஓர் அழைப்பு , ஒரு விண்ணப்பம், ஒரு வீடு 

குறிப்பு  39 

வினாயகரா  விநாயகரா ? 
வி+நாயகர்  அதாவது தமக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்பது இதன் பொருள். அதன்படி விநாயகர் 
என்பதே சரி. வினாயகர் என்ற எழுதினால் அதன் அர்த்தம் சிதைந்து விடும். 
அதே முறையில் 
  இராமன் + நாதன், தேவன் + நாதன் என்றே பெயர்களைப் பிரிக்கவேண்டும். ( இராம + நாதன் 
என்று பிரிப்பது வடமொழி முறை என்கிறார் அ.கி.பரந்தாமனார்) 
  அதனால் இராமனாதன் என்பது தவறு. இராமநாதன், தேவநாதன் என்பதே சரி. 
இயக்குனர் ? இயக்குநர் 
  ஓட்டுனர் ஓட்டுநர் 
எது சரி ? 
சொக்கன் எழுதுகிறார் 
ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ 
விகுதி வரும். 
உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் 
சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும். 
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் 
இருக்கவேண்டும்) + நர். 
இன்னும் சில உதாரணங்கள்: 
• ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர் 
• பெறுதல் ==> பெறு ==> பெறுநர் 
• ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர் 
• இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர் 
கவிஞர் மகுடேசுவரன் எழுதுகிறார் : 
பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர் – இம்மூன்றும் எங்கெங்கு எப்படியெப்படி வரும் என்பதைப் 
புரிந்துகொள்வதன் மூலம் இவை தொடர்பாக எழும் குழப்பங்களை எளிதில் தீர்க்கலாம். 
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் ! 
அறிஞர், பொறிஞர், கலைஞர், கவிஞர், வலைஞர். 
  இயக்குநர், அனுப்புநர், பெறுநர், ஓட்டுநர். 
  உறுப்பினர், பொறுப்பினர், படையினர், அணியினர். 
ஞர்-க்கு முன்னொட்டுவது பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக இருக்கிறது. 
நர்-க்கு முன்னொட்டுவது அச்செயலுக்குரிய வினைவேர்ச்சொல்லாக இருக்கிறது. கட்டளையிடுகிறது. 
  னர்-க்கு முன்னொட்டுவது பெயர்ச்சொல்லாக இருந்து இன்+அர் சேர்வதால் பலர்பால் 
பெயர்ச்சொல்லாகிறது. 
நர் சேர்க்குமிடங்களில் ‘உகர’ ஈற்றில் முடியும் வினைவேர்ச்சொல்லாக இருப்பதையும் 
கவனிக்கவும் (இயக்கு, அனுப்பு, பெறு, ஓட்டு). 

குறிப்பு  40 
“ற்” , ட்  ஆகிய எழுத்துக்குப்பிறகு இன்னொரு மெய்யெழுத்து வரக்கூடாது. 
பயிற்ச்சி, முயற்ச்சி, வேட்க்கை , மீட்ப்பு – தவறு 
பயிற்சி, முயற்சி, வேட்கை, மீட்பு – சரி 

குறிப்பு  41 
இருவகையாய் எழுதக்கூடிய  சொற்களில் சில : 
பவளம் – பவழம் 
கோவில் – கோயில் 
மதில் – மதிள் 
உழுந்து – உளுந்து 
மங்கலம் – மங்களம் 

குறிப்பு – 42 
தண்ணீர் என்பது  தண் ( குளிர்ச்சிபொருந்திய) + நீர்.  எனவே தண்ணீர் என்றாலே குளுமையான நீர் 
என்றுதான் பொருள். இதற்கு எதிர்ப்பதமான சூடான நீர் –  வெந்நீர் என்பதே.  சுடுதண்ணீர் என்பது 
தவறான பிரயோகம். தண்ணீர், வெந்நீர் என்பதே சரியானது. 

குறிப்பு எண் – 43 
Oil என்பது எண்ணெய்.  எண்ணை என்று எழுதுவது தவறு. 
எண்ணெய்  என்பது எள்+ நெய். பிசுபிசுப்பான திரவம் எல்லாமே நெய். எள்ளிலிருந்து 
எடுக்கப்படும் நெய் – எண்ணெய்.  இந்த எண்ணெய் என்பது நாளாவட்டத்தில் ஒரு பொதுப் பெயராகி 
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணை என்றெல்லாம் காரணப்பெயர் மறைந்து புதிய பெயர்கள் உருவாகிவிட்டன. 
எண்ணை என்று எழுதுவது ‘எண்’ ( Number) ஐ குறிப்பதாகிவிடும். எட்டாம் எண்ணை இரண்டால் 
வகுத்தால் நான்கு என்று விடை வரும் என்பது போல. 
குறிப்பு எண்- 44 
ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல என்பது விதி 
உதாரணம்: இந்தப் பேனா என்னுடையது அன்று.  இந்தப் பேனாக்கள் என்னுடையவை அல்ல 
நாம் ’அன்று’ என்கிற வார்த்தையை உபயோகிப்பதில்லை. எல்லாவற்றிற்கும் அல்ல என்று சொல்கிறோம். 
அவன் தன் வீட்டுக்குப் போனான் 
அவர் தம் வீட்டுக்குப் போனார் ( மரியாதைப் பன்மையில் தன் என்பது தம் என்றாகும்) 

பகுதி – 3 
சரியும் தவறும் 

 
”தமிழ் நடிகர்களில் கமலஹாசனே புத்திஜீவி.” – தவறு 
தமிழ் நடிகர்களுள் கமலஹாசனே புத்திஜீவி – சரி 
ஒப்பிடும்போது “ உள்” விகுதி வரவேண்டும். 

” எவ்வளவு முயற்சித்தாலும் கமல் போல் நடிக்க முடியாது” – தவறு 
”முயற்சித்தால்” என்னும் சொல் தவறானது. முயற்சி என்பது தொழிற்பெயர். தொழிற் பெயரில் 
இருந்து முயற்சித்தான் என்று வினைமுற்று உண்டாகாது. 
முயற்சி செய்தாலும்  என்றாவது  முயன்றாலும் என்றாவது எழுத வேண்டும். 

”பல நண்பர்கள் கமலின் விசிறிகள். சில நண்பர்கள் ரஜினியின் விசிறிகள்.” 
நண்பர்கள் பலர்  கமலின் விசிறிகள். நண்பர்கள் சிலர் ரஜினியில் விசிறிகள் என்பதே சரி. 
”பல”, “சில” என்பவை அஃறினைப் பன்மைகள். 
”இந்த ஓவியம் எத்தனை அழகாய் இருக்கிறது !.” 
இந்த ஓவியம் எவ்வளவு அழகாய் இருக்கிறது” என்பதே சரி. 
எத்தனை என்பது எண்களைக் குறிக்கும். அழகு, திறமை, தைர்யம் போன்ற பண்புகளுக்கு எவ்வளவு 
என்றே வருவது முறை . இந்த ஓவியம் எத்துணை அழகாய் இருக்கிறது என்பதும் சரி.(எத்தனை 
,எவ்வளவு என்கிற சொற்கள் எண்ணிக்கையை குறிக்கும்.எத்துணை என்பது அளவு ,பண்பு ,நிறம் 
போன்றவற்றை குறிக்கும் .—ஆதாரம் தமிழண்ணலின் உங்கள் தமிழை தெரிந்து கொள்ளுங்கள் எனும் நூல் 
(கருப்பம்புலம் பாலாஜி. ) 
”எப்படித் தாய் இருப்பாளோ அவ்வாறு மகள் இருப்பாள்.” – தவறு 
“எப்படித் தாய் இருப்பாளோ அப்படி மகள் இருப்பாள்”- சரி 
எப்படி, எவ்வாறு, எங்ஙனம், எவ்வளவு, எது  என்று வாக்கியம் தொடங்குமானால் சமநிலை 
வருவதற்கு “அப்படி, அவ்வாறு, அங்ஙனம், அவ்வளவு, அது என்றே வரவேண்டும். 
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு” 
”பிரதி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் விடுமுறை” 
பிரதி என்னும் சொல் வந்தால் ‘தோறும்’ தேவையில்லை. 
ஞாயிற்றுக்கிழமை தோறும் என்பதற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்பது பொருளாகும். 
ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் என்பது தவறு. 
”தமிழ்நாட்டில் கலையைக் காப்பது நமது திரைப்படங்கள்.” 
“முக்காற் பங்கு ஜனத்தொகை திரைப்படக்கொட்டகைகளில் இருக்கின்றன” – தவறு 
சரி : 
தமிழ்நாட்டில் கலையைக் காப்பவை நமது திரைப்படங்கள் 
முக்காற் பங்கு ஜனத்தொகை திரைப்படக்கொட்டகையில் இருக்கிறது ( ஒருமை எழுவாய்) 
”மோடி தன் தாய் நாட்டின் மதிப்பை அமெரிக்காவில் உயர்த்தினார்” 
“ 
மோடி தம் தாய் நாட்டின் மதிப்பை அமெரிக்காவில் உயர்த்தினார். 
மரியாதைக்காக  அல்லது உயர்வுக்காக ( மரியாதைப் பன்மை) “ஆர்” விகுதி சேர்க்கும்போது 
வினைமுற்றும் பலர்பால் வினைமுற்றாகவே இருக்கவேண்டும். 
பி.கு : மோடி மேல் மரியாதை இல்லதவர்கள் காந்தி, அம்பேத்கார், மன்மோகன் சிங் என்று பெயர் 
மாற்றிக்கொள்ளவும். 
”ஐம்பத்தி மூன்று,  சக்களத்தி, சின்னாபின்னம், சுவற்றில், நிச்சயதார்த்தம், ரொம்ப, 
வாய்ப்பாடு, வியாதியஸ்தர், வெண்ணை,வெய்யில், ஒருவள், அருகாமை, உத்திரவு, கண்றாவி, 
பண்டகசாலை, மடப்பள்ளி, மாதாமாதம்” – தவறு 
“ 
ஐம்பத்து மூன்று, சகக்களத்தி, சின்னபின்னம், சுவரில், நிச்சியதார்த்தம்,  நிரம்ப, 
வாய்பாடு, வியாதிஸ்தர், வெண்ணெய், வெயில்,  ஒருத்தி, அருகில், உத்தரவு, கண்ணராவி, 
பண்டசாலை, மடைப்பள்ளி, மாதம்மாதம்”- சரிதவறில்லாமல் தமிழ் எழுத  60 குறிப்புகள் 

தமிழ் இலக்கணத்தை முழுமையாகப் படிக்க ஆர்வம்  இல்லாத ஆனால் தமிழ் எழுதும் ஆர்வம் 
உள்ளவர்களுக்காகச்  சுருக்கமான  குறிப்புகள் மூலம் தமிழில் பிழை இல்லாமல் எழுதக் 
கற்றுக்கொடுக்கும் முயற்சி இது. மாணவர்களின் மொழியில் சொன்னால் ‘ஒரு க்ராஷ் கோர்ஸ்’. 
நானும் மாணவன் தான். 

உங்களுக்கும் உதவலாம். 
 

பகுதி – 1 

a) ஒற்று மிகும் இடங்கள்- 5  – களத்தூர் கண்ணம்மா பிரிவுkalathur-kannamma 
b) ஒற்று மிகும் இடங்கள் – 11 – ராஜபார்வை பிரிவு 
Raja-Paarvai 
c) ஒற்று மிகா இடங்கள் – 11 – நாயகன் பிரிவு 
nayakan kamal 
d) ஒற்று மிகும்/ மிகா இடங்கள்- வேற்றுமை உருபுகள் – 8- விஸ்வரூபம் பிரிவு 
vishwaroopam kamal 
பகுதி – 2  அபூர்வ ராகங்கள் பிரிவு 
Apoorva-Raagangal-kamal 
பகுதி – 3 – சரி – தவறு  – ஆளவந்தான் பிரிவு 
aalvandhan 

பகுதி -1 
ஒற்று மிகும் இடங்கள் – பொது விதி 

1. க, ச, ட, த, ப, ற என்கிற வல்லின எழுத்துக்களோடு துவங்கும் வார்த்தைகளுக்கு முன்பு 
மட்டுமே ஒற்றெழுத்து வரும். இதில் ட, ற என்கிற எழுத்துக்களோடு பொதுவாக வார்த்தைகள் 
துவங்காது என்பதால் க, ச, த, ப மட்டுமே கவனிக்கவேண்டியவை. 

2. ஆகவே ஒற்று என்றால் க,ச,த,ப என்கிற வல்லின எழுத்துக்களின் வேர்களான க், ச், த், ப்   
என்ற நான்கு மெய்யெழுத்துகள் மட்டுமே. 

3. எனவே ஒற்று மிகும் இடங்கள் என்று இந்தப் பகுதியில் நாம் விவாதிக்கப்போவது இரண்டு 
வார்த்தைகளுக்கு இடையே ( முதல் வார்த்தை , இரண்டாம் வார்த்தை) க்,ச்,த்,ப் வரும் இடங்களை 
மட்டுமே. 

4. க, ச, த, ப என்ற எழுத்துக்களில் துவங்கும் சொல் வருமொழியாக ( The following 
word) இருந்தால் மட்டுமே முறையே க், ச், த், ப், ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும். க என்றால் 
– ‘க’ முதல் ‘கௌ’ வரை, இவ்வாறே ச, த, ப என்னும் எழுத்துகளுக்கும். 
புரிந்ததா…  சரி முதல் பிரிவுக்குப் போவோம் 

 
 
“ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். ” 
அதாவது முதல் வார்த்தை ஓரெழுத்துச் சொல்லாய் இருந்து,  இரண்டாம் வார்த்தை  க, ச, த, ப   
ஆகிய வல்லின எழுத்துக்களில்  ஆரம்பித்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப்  ஆகிய ஒற்று 
மிகும். 
உதாரணங்கள் : 
  பூ+பறித்தாள் – பூப்பறித்தாள் 
  தீ+ பிடித்தது – தீப்பிடித்தது 
  கை+ குழந்தை – கைக்குழந்தை 

விதி – 2 

”அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய எண்களுக்குப் பின்னல் மட்டும் ஒற்று மிகும்.” மற்ற 
எண்களுக்கு மிகாது. 
அதாவது முதல் வார்த்தை அரை, பாதி, எட்டு , பத்து என்று முடிந்து அடுத்த வார்த்தை க, 
ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணம் : அரைப்பக்கம், பாதித் துணி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, எட்டுக்கட்டுகள், 
பத்துச்செய்யுள்கள். 

விதி – 3 

தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்னால் ஒற்று மிகும் 
அதாவது முதல் வார்த்தை தமிழ் மாதங்களின் பெயராய் இருந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணம் : தைப் பொங்கல், ஆடிப் பட்டம், மார்கழித் திங்கள் 

விதி 4 

தனி எழுத்தும் ( குற்றெழுத்து) அதனுடன் இணைந்து “ஆ” என்ற ஓசையுடன் முடிகிற 
வார்த்தையின் பின்னால் ஒற்று மிகும். 
அதாவது ஒரு தனி எழுத்தும் ஆ என்கிற ஓசையுள்ள எழுத்தும் கொண்ட வார்த்தை முதலில் வந்து, 
அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இரண்டுக்கும் இடையே 
க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : கனாக்கண்டேன், ( கனா + கண்டேன்) சுறாத்தலை ( சுறா + தலை) நிலாப்பயணம் ( 
நிலா + பயணம்) 

விதி – 5 

அ, இ, எ + அந்த, இந்த, எந்த, + அங்கு இங்கு, எங்கு, +அப்படி, இப்படி, எப்படி, 
+அவ்வகை, இவ்வகை, எவ்வகை, + அத்துணை, இத்துணை, எத்துணை முதலிய சொற்கள்  முதல் சொல்லாக 
இருந்து “க, ச, த, ப”  ஆகிய எழுத்துக்கள் கொண்ட சொல் பின்னால் வந்தால் இரண்டுக்கும் 
இடையே  க், ச், த், ப்  ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள்: 
அக்குடம், இச்செடி, எப்பக்கம் 
  அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம் 
  அங்குச் சென்றான், இங்குப் போகாதே, எங்குக் கேட்டாய் 
  அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய் 

பகுதி – 2   ஒற்று மிகும் இடங்கள் 

விதி – 6 

திரு, நடு, முழு, விழு, பொது, அணு, புது, ஆகிய    இச்சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். 
அதாவது முதல் வார்த்தை மேற்கண்ட வார்த்தைகளா இருந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : திருக்கோயில், நடுத்தெரு, முழுப்பேச்சு, விழுப்பொருள், பொதுப்பணி, 
புதுக்கல்வி, அணுக்குண்டு ( யெஸ் யுவர் ஆனர்.. நாம அப்படிச் சொல்றதில்லையே தவிர 
அணுக்குண்டுதான் இலக்கணப்படி சரி) 
முழுசா ’உ’ என்கிற ஓசையோடு முடியற இந்த வார்த்தைகளுக்கு இலக்கண ரீதியான பெயர்   
முற்றியலுகரம். 

விதி – 7 

  முக்கியமான விதி இது. 
சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வந்தால் ஒற்று மிகும். இந்தச் 
சொற்கள் – கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும். இதற்கு குற்றியலுகரம் 
என்று பெயர். 
இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் வல்லின மெய் 
எழுத்துக்களான க், ச், ட், த், ப், ற்  வரவேண்டும் என்பது இரண்டாவது அவசியம். இப்படி 
வந்தால் அதற்கு வன் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர் 

உதாரணங்கள் : 
  மக்கு, தச்சு, செத்து, உப்பு, கற்று போன்ற சொற்கள். 
ஆக, இந்த விதியை இலக்கண முறையில் சொல்லவேண்டுமென்றால் ; 
”வன் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முதலில் வந்து, ‘க,ச,த,ப எழுத்துகளோடு துவங்கும் 
சொற்கள் பின்னால் வந்தால் இரண்டுக்கும் இடையே ஒற்று மிகும்.” 
உதாரணங்கள் : 
  மக்குப் பையன் 
  தச்சுத் தொழில் 
  உப்புக் கடை 
  விட்டுச் சென்றார் 

விதி – 8 

ஏழாம் விதியின் விதிவிலக்கு இது. 
வன் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமல்லாமல்  விதிவிலக்காய் ஒரு சில மென் தொடர்க் 
குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் ஒற்று மிகும். 
அதாவது சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வரும். இந்தச் சொற்கள் 
– கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும். 
இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் மெல்லின மெய் எழுத்துக்கள் 
வந்தால் அதற்கு மென் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர். 

அதைத் தொடர்ந்து பின்னால் வரும் வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் 
துவங்கினால் முறையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள்:  பாம்புத் தோல்,  குரங்குக் கூட்டம்,  கன்றுக்குட்டி , மருந்துக்கடை 

விதி – 9 

’அ’ அல்லது ‘இ’ ன்னு முடியற வார்த்தைக்குப் பின்னால ஒற்று மிகும். 
உதாரணம் – தேடிப் போனார், மெல்லச் சொன்னார், தேடிச் சென்றார், வாடிப் போயிற்று. 
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘அ’ அல்லது ‘இ’ சவுண்டோட முடிஞ்சி அதுக்குப் பின்னால 
வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற ஒற்று 
மிகும். 
இதுல கவனிச்சீங்கன்னா ரெண்டாவது வார்த்தை எல்லாம் போனார், சொன்னார், சென்றார், போயிற்று 
அப்பிடின்னு எல்லாம் வினைச் சொல்லா (Verb) இருக்கு. 
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் தேடி, மெல்ல, வாடி அப்படின்னு பாதியிலேயே நிக்குது. 
பின்னால வர்ற வினைச் சொல்லோட சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதெல்லாம் Dependent 
Verb- அது பேரு ”வினை எச்சம்.” 
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘அ’ அல்லது ‘இ’ என்ற ஓசையோடு முடிகிற வினை எச்சத்தின் 
(அகர இகர ஈற்று வினையெச்சம்) பின்னால் ஒற்று மிகும். 

விதி – 10 

”ஆய், போய், ஆக, போக, ” அப்படின்னு முடியற வார்த்தைகளுக்குப்பின்னால் ஒற்று மிகும் 
உதாரணம் : கேட்பதாய்க்கூறினான், ( கேட்பதாய் + கூறினான்) சொன்னதாய்ச்சொல்,( சொன்னதாய் + 
சொல்) போய்த்தேடினார், ( போய் + தேடினார்) இருப்பதாகக்கூறு.( இருப்பதாக + கூறு) 
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிஞ்சி, அதுக்குப் 
பின்னால வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற 
ஒற்று மிகும். 
இதுலயும் முந்தய விதி மாதிரி ரெண்டாவது வார்த்தை எல்லாம் ‘ கூறினான், தேடினார்’ 
அப்பிடின்னு வினைச் சொல்லா (Verb) இருக்கு பாருங்க. 
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் பாதியிலேயே நிக்குது. பின்னால வர்ற வினைச் சொல்லோட 
சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதாவது Dependent Verb- நேற்றைய விதி மாதிரி 
இதுவும் ”வினை எச்சம்.” 
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிகிற வினை எச்சத்தின் 
பின் ஒற்று மிகும். 

விதி – 11 

ய், ர், ழ் என்கிற எழுத்துகளோடு முதல் வார்த்தை முடிந்து இரண்டாவது வார்த்தை க, ச, த, 
ப  என்கிற எழுத்துக்களில் துவங்குகிற பெயர்ச்சொல்லாக (Noun) இருந்தால்  இரண்டுக்கும் 
இடையே க், ச், த், ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் :: 

மோர்க்குழம்பு, ( மோர் + குழம்பு) தாய்ப் பாசம், ( தாய் + பாசம்) போர்க் களம், ( போர் + 
களம்) தமிழ்ச் செயலி, தமிழ்த் தாய். ( தமிழ் + தாய்) 

விதி – 12 

முதல்ல உதாரணத்தைப் பாக்கலாம் : தங்கத் தாமரை, வெள்ளைப் புறா 
தங்கம், வெள்ளை இதெல்லாம் என்ன ? தாமரை , புறா இவற்றின் பண்புகள். 
தங்கத்தால் ஆகிய தாமரை, வெள்ளையான புறா. 
அதனால இதுக்கு ‘ பண்புத் தொகை’ ன்னு பெயர். 
அதாவது முதல் வார்த்தை ஒரு பண்பை உணர்த்தி,  இரண்டாம் வார்த்தை க, ச, த, ப  ஆகிய 
வல்லின எழுத்துக்களில் துவங்கினால் இரண்டுக்கும் இடையில் க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்து மிகும் 
தொகைன்னா  என்னா ? 
தங்கத்தால் ஆகிய தாமரை,   வெள்ளையான தாள்  என்கிற வார்த்தைகளில் ’ஆல்’ ‘ ஆன’   
அப்படிங்கற வார்த்தைகள் மறைஞ்சி இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ 
தொகை’ அப்படின்னு பேரு. அவ்வளதான் சமாச்சாரம். 

விதி – 13 

உதாரணம் – மல்லிகைப்பூ ( மல்லிகை + பூ) 
பூ என்பது பொதுப் பெயர். மல்லிகை சிறப்புப்பெயர். இரண்டும் ‘பூ’ வுடன் 
தொடர்புடையதுதான். மல்லிகைன்னு சொன்னாலே பூ தான். இப்படி இரண்டு பண்புகளைக் கொண்ட 
சொற்களுக்கு  ’இருபெயரொட்டுப் பண்புத் தொகை.’ ன்னு பேரு. 
இங்கே இரண்டாம் வார்த்தை  க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால்  க், ச் த், 
ப், ஆகிய ஒற்று மிகும். 
இன்னும் சில உதாரணங்கள் : கோடைக்காலம், மல்லிகைப்பூ, மழைக்காலம், செவ்வந்திப்பூக்கள் 

விதி – 14 

உவமைகள் வர்ற இடங்களிலே ஒற்று மிகும் 
உதாரணம் : தாமரைக்கண் ( தாமரை + கண்), முத்துப்பல் ( முத்து + பல்) தாமரையைப் போல 
இருக்கற கண் , முத்து மாதிரி இருக்கற பல். 
அதாவது முதல் வார்த்தை ஒரு உவமையா இருந்து இரண்டாவது வார்த்தையா க,ச,த,ப  ஆகிய 
வல்லின எழுத்து வந்தா  இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
இலக்கண ரீதியா சொல்லணும்னா “ உவமைத் தொகையில் ஒற்று மிகும்” 
தொகைன்னா  என்னான்னு உங்களுக்குத் தெரியும்.. 
தாமரை போன்ற கண், முத்து போன்ற பல்  அப்படிங்கறதுல  ”போன்ற” அப்படிங்கற வார்த்தை மறைஞ்சி 
இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ தொகை’ அப்படின்னு பேரு. 
இன்னொண்ணு.  உவமை மறையாமல் வந்தாலும் ஒற்று மிகும் 
உதாரணம் : மயில் போலப் பொண்ணு ஒண்ணு. 

விதி 15 

ட, ற  என்று முடியும் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும் 
முதல் வார்த்தை ட, டு ஆகிய எழுத்துக்களுடன் முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : 
தமிழ்நாடு + கலை = தமிழ்நாட்டுக்கலை 
வீடு + சோறு  = வீட்டுச் சோறு 
ஆறு + தண்ணீர் = ஆற்றுத்தண்ணீர் 
கிணறு + தவளை = கிணற்றுத் தவளை 

விதி – 16 

ஊர்ப்பெயர்களை அடுத்து கட்டாயம் ஒற்று மிகும். 
அதாவது ஊர்ப்பெயர் முதல் வார்த்தையாய் இருந்து இரண்டாம் வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின 
எழுத்துக்களோடு துவங்கினால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும். 
சென்னைக் கடற்கரை. குமரிக்கடல். திருச்சிக் காவிரி. 

 

பகுதி – 3 – ஒற்று மிகா இடங்கள்
  

விதி – 17 

பெயரெச்சங்களின் ( Relative Verbal Form) பின் ஒற்று மிகாது. 
உதாரணம் : உறங்கிய பையன் – உறங்கிய என்பது குறைந்த வினைச்சொல். அதனால் அது எச்சம் 
எனப்படும். உறங்கிய என்னும் எச்சம் பையன் என்ற பெயரைச் சார்ந்திருப்பதால் அது பெயரெச்சம் 
எனப்படும். 
இங்கே உறங்கிய என்ற பெயரெச்சத்திற்குப் பின் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்கள் வந்தாலும் 
ஒற்று மிகாது. 
மேலும் உதாரணங்கள் : படித்த பையன், ஓடுகிற குதிரை, பெரிய பெட்டி, நல்ல பாம்பு, நல்ல 
குழந்தை. 

விதி – 18 

விதி எண் 17 இல் பெயரெச்சத்தின் பின் ஒற்று மிகாது என்று பார்த்தோமில்லையா ? இன்னைக்கு 
அதோட விதிவிலக்கு விதி பார்ப்போம் 
”ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் ஒற்று மிகும்.” 
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் – இதுக்கு பல்லு விளக்காம ஈறு கேட்டுப்போயிருந்தா 
எதிர்ல இருக்கறவங்க மேல பேசும்போது எச்சை தெறிக்கும்ங்கறாமாதிரி தோணினாலும் அதற்கு 
கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்சம் என்று அர்த்தம். ஈறு ( இறுதி) கெட்ட ( 
மறைந்த)  எதிர்மறை ( opposite) பெயரச்சம் (Relative Verbal form) – 
அதாவது சொல்லின் இறுதியில் கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்ச சொற்கள் வந்து, 
இரண்டாவது வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்தோடு ஆரம்பித்தால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய 
ஒற்று மிகும். 
உதாரணம் : 
அறியா + பிள்ளை = இந்த வார்த்தையின் முழுவடிவம் ”அறியாத பிள்ளை”  ஆனால் அறியாத வின் 
இறுதியில் “த” மறைந்திருக்கிறது. அதனால் இங்கே ஒற்று மிகுந்து அறியாப் பிள்ளை என்று வரும் 
தீரா + துன்பம் = தீராத  என்பது முழுமையான சொல். அதில் த கெட்டிருக்கிறது. அதனால் 
தீராத்துன்பம் என்று ஒற்றுமிகும். 
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அப்படிங்கற பயமுறுத்துகிற சொற்பிரயோகத்துக்குப் பின்னால் 
எவ்வளவு எளிதான விதி ஒளிந்திருக்கிறது பாருங்கள். 
தமிழ் இலக்கணம்  கீதே அது சொம்மா பிலிம் காட்ற மெட்ராஸ் ரவுடி மாதிரி. பயந்து ஒளிஞ்சா 
நாம அம்பேல் ஆயிருவோம். தம் கட்டி எய்த்து நிக்கணும். ”தட்னா தாராந்துரும். 

விதி – 19
 
அது, இது, எது, 
அவை, இவை, எவை, 
அன்று, இன்று, என்று, 
அத்தனை, இத்தனை, எத்தனை, 
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, 
அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு 
போன்ற சொற்களுக்குப் பின் ஒற்றெழுத்து மிகாது. 
உதாரணங்கள் : அது பெரியது,  இவை சென்றன , எத்தனை பூக்கள், அவ்வளவு பருப்பு, இவ்வாறு 
கூறினான். 

விதி 20 

இரு வட மொழிச் சொற்கள் சேர்ந்து வரும்தொடர்களில் வலி மிகாது 
ஆதிபகவன், தேசபக்தி 

விதி – 21 

ஆ, ஓ, யா என்னும் கேள்வி கேட்கும் வினாக்களுக்குப் பின் வலி மிகாது. 
உதாரணங்கள் : அவனா போனான் ? அவனா சொன்னான் இருக்காது ? தம்பியோ கேட்கிறான். 

விதி – 22 

வினைத்தொகையில் ஒற்று மிகாது. 
உதாரணம் : சுடுகாடு 
வினைச் சொல்லின் பகுதியும்( சுடு- சுடுகின்ற) பெயர்ச்சொல்லும் ( காடு) சேர்ந்து 
பெயரெச்சத் தொடர் போல வருவது வினைத்தொகை 
இன்னும் சில உதாரணங்கள் :  உரைகல், குடிதண்ணீர், 

விதி – 23 
வெற்றிலை பாக்கு 
சொல்லிப்பாத்தா வெற்றிலைப் பாக்கு ன்னு வரணும் போல தோணுதில்ல ? ஆனா இங்க ஒற்று மிகாது. 
வெற்றிலை பாக்கு அப்படிங்கறதை முழுமையாகச் சொன்னால் வெற்றிலையும் பாக்கும் அப்படின்னு 
வரும். இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது. அப்படி மறைந்தால் அங்கே ஒற்று மிகாது. அதாவது 
இரண்டு பொருள்களை பட்டியலிட்டு அதில் உம் என்ற வார்த்தை வராமல் மறைந்தால் அங்கே ஒற்று மிகாது. 
இதுக்கு இலக்கண ரீதியா ‘ உம்மைத் தொகைன்னு பேரு. தொகைன்னா மறைஞ்சி இருக்கறதுன்னு. 
இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது. 
உதாரணங்கள் : இட்டிலி சாம்பார், யானை குதிரை 

விதி – 24 
அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி இரண்டிலேயும் ஒற்று மிகாது. 
அடுக்குத் தொடர் உதாரணம் – மெல்ல மெல்ல, தாவி தாவி – இந்த தொடரில் இருக்கும் இரண்டு 
வார்த்தைகளை பிரித்தாலும் பொருள் வரும். 
இரட்டைக் கிளவி அப்படி இல்ல. பிரித்தால் பொருள் வராது. ஜீன்ஸ் படப் பாட்டு கேட்டிருப்பீங்க. 
உதாரணம் – சல சல என்று ஓடிய தண்ணீர், விறு விறு என்று நடந்தான், 
அடுக்குத் தொடரோ  இரட்டைக் கிளவியோ இரண்டிலும் ஒற்று மிகாது. 

விதி – 25 
சிறு, சிறிய , பெரிய  ஆகிய சொற்களுக்குப் பின் ஒற்று மிகாது 
சிறு துரும்பு, சிறிய சிக்கல், பெரிய கொடுமை 

விதி – 26 

இன்னைக்கு டாஸ்மாக் விதி – ’கள்’  சேர்ந்தால் உடம்பு வலி மிகாதது போல 
(வன்தொடர்க் குற்றியலுகரச்) சொற்களின் பின் “ கள்” “  என்னும் விகுதி சேரும்போது ’க்’ 
என்கிற ஒற்று  மிகுதல் அவசியமில்லை. 
உதாரணங்கள் : வாக்குகள், வாழ்த்துகள், தோப்புகள், எழுத்துகள், 

விதி 27 

உபரி விதிகளை இங்கே ஒன்றாய்ப் போட்டிருக்கிறேன். 
* கூப்பிடுகின்ற விளிப்பெயரின் பின் (விளித்தொடர்) ஒற்று மிகாது 
உதாரணம் : தம்பி போ. ! தம்பி பார். 
* ஏவல் வினைமுற்றின் ( Imperitive Verb) பின்னும் ஒற்று மிகாது 
உதா : போ தம்பி 
* வியங்கோள் வினை முற்று ( optative verb) பின் ஒற்று மிகாது. இது மரியாதையாய் 
கட்டளையிட, சபிக்க, வாழ்த்த, வேண்டிக்கொள்ள பயன்படும். 
உதா : வீழ்க கொடுமை 
* வினைமுற்றுத் தொடரின் பின் ஒற்று மிகாது 
உதா : பாடியது பறவை 
* முன்னிலை வினைமுற்றின் பின் ஒற்று மிகாது 
வருதி குமர 
* முற்றுவினைக்குப் பின் பின் வலி மிகாது- 
வாரா குதிரைகள். 

பகுதி – 3 – ஒற்று மிகும்/மிகா இடங்கள் 
 

விதி – 28 

எழுவாய்த் தொடரில் ஒற்று மிகாது. (  முதலாம் வேற்றுமை உருபு) 
எழுவாய் அப்படின்னா ? 
ஒரு வாக்கியத்தின் அமைப்பில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை : 
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள். 
யார் செய்தது என்ற கேள்விக்கு விடையளிப்பது – எழுவாய் 
என்ன செயல் செய்யப்பட்டது என்பதற்கு விடை தருவது – பயனிலை 
எதைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடை தருவது – செயப்படுபொருள் 
உதாரணம் ;  கமலஹாசன் கோயில் சென்றார், 
கமலஹாசன் – எழுவாய் 
சென்றார் –  பயனிலை 
கோயில் – செயப்படுபொருள் 
இது போன்ற எழுவாய்த் தொடரில், இரண்டாம் வார்த்தை க,ச,த,ப என்று துவங்கினாலும் ஒற்று மிகாது. 
உதாரணங்கள் : 
துணி கிழிந்தது 
கிளி பேசியது 
கோழி கூவியது 
நாய் தின்றது 

விதி – 29 

‘ஐ’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். ( இரண்டாம் வேற்றுமை 
உருபு) 
அதாவது முதல் வார்த்தை ’ஐ’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் :   பூனையைப் பார்த்தான், உன்னைக் கேட்டால்,  அவனைப் பிடித்தால் 
இதுக்கு விதிவிலக்கு ஒண்ணு இருக்கு. முரளி போடற தூஸ்ரா போல. 
‘ஐ’ மறைஞ்சி வந்தா ஒற்று மிகாது. 
உதாரணம் –  மான் கண்டேன். 
மானை+ கண்டேன் அப்படின்னு எழுதாம, மான் கண்டேன்னு எழுதினா அப்ப ஒற்று வராது. அதே போல 
மயிலைக் கண்டேன், மயில் கண்டேன், 
ஓக்கேவா ? 
ஐ.. அதுக்குள்ள சந்தோஷப்பட்டா எப்பிடி.. இன்னும் இருக்கு. இது தீஸ்ரா. 
சில சமயம் ’ ஐ’ மறைந்து அதோட சில வார்த்தைகளும் கூட மறைந்து வரும். உதாரணம் தண்ணீர்த் 
தொட்டி.  அதாவது தண்ணீரை உடைய தொட்டி.  இங்க ஐ மட்டும் இல்லாம ‘உடைய’ அப்படிங்கற 
வார்த்தையும் மறைந்திருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அங்க ஒற்று மிகும். 
இன்னொரு உதாரணம் : 
யானை + பாகன் அதாவது யானையை ஓட்டும் பாகன் = யானைப் பாகன் 
இங்க ஐ மறைஞ்சிருக்கு கூடவே ஓட்டும் என்கிற வார்த்தையும் மறைஞ்சிருக்கு பாருங்க. 
இன்னும் சில உதாரணங்கள் : 
தேர்ப் பாகன் ( தேரை ஓட்டும் பாகன்) தயிர்க்குடம், ( தயிரை உடைய குடம்) காய்கறிக்கடை, 
சிற்றுண்டிச்சாலை.. 
இலக்கண ரீதியா இதுக்கு ‘உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை ” அப்படின்னு பேர்.  அதாவது 
உருபும் ( ஐ) அதோட பயனும் (உடைய) இரண்டும் தொக்க (இணைந்து) தொகை ( மறைந்து வருவது) 
என்ன..?  ரொம்ப பேஜாரா இருந்தா இலக்கணரீதியான வரியை மறந்துடுங்க. 

விதி – 30 

‘கு’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். (நான்காம் வேற்றுமை 
உருபு.) 
அதாவது முதல் வார்த்தை ’கு’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப 
ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும். 
உதாரணங்கள் : அவனுக்குத் தா , கடைக்குப் போனான் 
இதிலயும் ஒரு தூஸ்ரா 
’கு’ மறைஞ்சு வந்தா,   அஃறினைப் பெயர்கள் முதல் வார்த்தையா இருந்தா மட்டும்தான் ஒற்று 
மிகும்.  உயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது. 
உதாரணம் : வேலி+ கால் = வேலிக்கால் 
இங்கே வேலிக்குக் கால். ‘கு’ மறைஞ்சு வந்திருக்கு. வேலி அஃறிணைப் பெயர். அதனால ஒற்று 
மிகும் 
உயர்திணை உதாரணம் : பொன்னி + கணவன் அதாவது பொன்னிக்குக் கணவன் என்பதை பொன்னி கணவன் 
என்று எழுதினால் ஒற்று மிகாது 
இப்ப தீஸ்ரா 
’கு’ என்கிற உருபும் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று 
மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் : குழந்தை+பால் = குழந்தைப் பால்  கோழி+தீனி = கோழித் தீனி 

விதி – 31 

ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது 
(மூன்றாம் வேற்றுமை உருபு) 
உதாரணம் – கத்தியால் குத்தினான், அவனோடு சுத்தினான். 
ஆனால்  ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய 
வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் :  வெள்ளித் தட்டு, பட்டுச் சேலை ( வெள்ளியால் செய்யப்பட்ட தட்டு, பட்டால் 
நெய்யப்பட்ட சேலை) பித்தளைக் குடம், மோர்க்குழம்பு 

விதி – 32 

இல், இன், இருந்து ஆகிய வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது 
(ஐந்தாம் வேற்றுமை உருபு) 
உதாரணம் : தாய்மொழியில் கூறு 
இல் இன் இரண்டும் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது 
தாய்மொழி கூறு 
ஆனால்  இல், இன், இருந்து  ஆகிய உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய 
வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் :  பழச்சாறு ( பழத்தில் பிழிந்த சாறு) 

விதி – 33 

‘அது, ஆது,  உடைய ஆகிய வார்த்தைகள் முதல் வார்த்தையின்  இறுதியில் வந்தால் ஒற்று 
மிகாது (ஆறாம் வேற்றுமை உருபு) 
உதாரணங்கள் : நண்பனது கட்டில், என்னுடைய கைகள் 
இந்த உருபுகள் மறைந்து வந்து ( வேற்றுமைத் தொகை) முதலில் வரும் சொல் அஃறிணையாய் 
இருந்தால் மட்டும் வலி மிகும். அதாவது- முதலில் வரும் சொல், உருபுகள் மறைந்திருக்கும் 
அஃறிணைச் சொல்லாய் இருந்து பின் வரும் சொல் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்களின் 
துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும் 
உதாரணம் : கிளிப்பேச்சு ( கிளியினது பேச்சு) குருவித்தலை, கிளிக்கூடு, நாய்க்குட்டி 

விதி – 34 

கண், இடம்- என்று முடியும் வார்த்தைகளுக்குப் பிறகு ஒற்று மிகாது (ஏழாம் வேற்றுமை உருபுகள்) 
உதாரணம் : மலையின்கண் திரிவோர். 
இந்த உருபுகள் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது 
உதாரணம் : மலை திரிவோர் 
ஆனால் இந்த உருபுகள் மறைந்து, இதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்து வந்தால் 
ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை) 
உதாரணம் : மலைக்கோவில் ( மலையின் கண் எழுந்த கோவில்) 

விதி – 35 

அழைப்பது அல்லது விளிப்பது போல வரும் சொல் இது. இந்த ”விளி வேற்றுமை” க்கு ஒற்று 
மிகாது. (எட்டாம் வேற்றுமை உருபு) 
உதாரணம் : தலைவா போதும், அம்மா பாடு 

பகுதி -2  
 

குறிப்பு – 36 
பழக்கம், வழக்கம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ? 
ஒருவர் தன் அளவில் தனி மனிதனாய் ஏற்படுத்திக்கொள்வது- ’பழக்கம்’ 
ஒரு சமுதாயமாய், ஊராய் நாடாய் செய்வது வழக்கம் 
காலையில எழுந்ததும் பல்லு விளக்காம காபி சாப்படறது என் ‘பழக்கம்’. 
ஒவ்வொரு தேர்ந்தலிலும் அரசியல்வாதிகள் சொல்வதை நம்பி ஏமாந்து ஓட்டுப் போடுவது மக்களின் 
வழக்கம். 

குறிப்பு -37 

முதலிய,  ஆகிய, போன்ற – இந்தச்  சொற்களின் பயன்பாட்டில் வித்தியாசம் என்ன ? 
எதையாவது பட்டியல் இடும்போது அது முழுமையான பட்டியலாக இல்லாவிட்டால் முதலிய என்கிற 
வார்த்தைப் பிரயோகம் வரும். 
பட்டியல் முழுமையானதாய் இருந்தால் ‘ஆகிய’ வரும். 
போன்ற என்ற வார்த்தை, அதற்கு முன்னால் சொல்லப்பட்டவை  அதன் உவமையாகவோ, நிகரானவைகளைச் 
சுட்டிக்காட்டப்  பயன்படும். 

உதாரணம் : 
1. மன்மோகன் சிங், நரசிம்ம ராவ், வாஜ்பாய் முதலியோர் இந்தியாவின் திறமையான பிரதம 
மந்திரிகளாய் இருந்தார்கள். ( இவர்களைத் தவிர இன்னும் சிலரும் திறமையான  பிரதமர்களாய் 
இருந்தார்கள் என்று அர்த்தம்) 
1. முதலமைச்சர் பதவியிலிருந்த லாலு யாதவ், ஓம் பிரகாஷ் சௌத்தாலா, ஷிபு சோரன், மது 
கோடா, எடியுரப்பா, பிரகாஷ் சிங் பாதல், ஜெயலலிதா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகச் 
சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள். ( இவர்களைத் தவிர வேறு எந்த முதலமைச்சரும் சிறைத்தண்டனை 
அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்) 
1. காந்தி , காமராஜ் போன்ற அரசியல்வாதிகள் இனி இந்திய அரசியலில் கிடைக்கமாட்டார்கள். 

குறிப்பு  38 

ஓரு &  ஓர் 
சொல் உயிரெழுத்தில் துவங்கினால் ஓர் வரவேண்டும். 
இல்லையென்றால் ஒரு. 
உதாரணங்கள் :  ஓர் உதவி, ஓர் அழைப்பு , ஒரு விண்ணப்பம், ஒரு வீடு 

குறிப்பு  39 

வினாயகரா  விநாயகரா ? 
வி+நாயகர்  அதாவது தமக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்பது இதன் பொருள். அதன்படி விநாயகர் 
என்பதே சரி. வினாயகர் என்ற எழுதினால் அதன் அர்த்தம் சிதைந்து விடும். 
அதே முறையில் 
  இராமன் + நாதன், தேவன் + நாதன் என்றே பெயர்களைப் பிரிக்கவேண்டும். ( இராம + நாதன் 
என்று பிரிப்பது வடமொழி முறை என்கிறார் அ.கி.பரந்தாமனார்) 
  அதனால் இராமனாதன் என்பது தவறு. இராமநாதன், தேவநாதன் என்பதே சரி. 
இயக்குனர் ? இயக்குநர் 
  ஓட்டுனர் ஓட்டுநர் 
எது சரி ? 
சொக்கன் எழுதுகிறார் 
ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ 
விகுதி வரும். 
உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் 
சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும். 
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் 
இருக்கவேண்டும்) + நர். 
இன்னும் சில உதாரணங்கள்: 
• ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர் 
• பெறுதல் ==> பெறு ==> பெறுநர் 
• ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர் 
• இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர் 
கவிஞர் மகுடேசுவரன் எழுதுகிறார் : 
பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர் – இம்மூன்றும் எங்கெங்கு எப்படியெப்படி வரும் என்பதைப் 
புரிந்துகொள்வதன் மூலம் இவை தொடர்பாக எழும் குழப்பங்களை எளிதில் தீர்க்கலாம். 
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் ! 
அறிஞர், பொறிஞர், கலைஞர், கவிஞர், வலைஞர். 
  இயக்குநர், அனுப்புநர், பெறுநர், ஓட்டுநர். 
  உறுப்பினர், பொறுப்பினர், படையினர், அணியினர். 
ஞர்-க்கு முன்னொட்டுவது பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக இருக்கிறது. 
நர்-க்கு முன்னொட்டுவது அச்செயலுக்குரிய வினைவேர்ச்சொல்லாக இருக்கிறது. கட்டளையிடுகிறது. 
  னர்-க்கு முன்னொட்டுவது பெயர்ச்சொல்லாக இருந்து இன்+அர் சேர்வதால் பலர்பால் 
பெயர்ச்சொல்லாகிறது. 
நர் சேர்க்குமிடங்களில் ‘உகர’ ஈற்றில் முடியும் வினைவேர்ச்சொல்லாக இருப்பதையும் 
கவனிக்கவும் (இயக்கு, அனுப்பு, பெறு, ஓட்டு). 

குறிப்பு  40 
“ற்” , ட்  ஆகிய எழுத்துக்குப்பிறகு இன்னொரு மெய்யெழுத்து வரக்கூடாது. 
பயிற்ச்சி, முயற்ச்சி, வேட்க்கை , மீட்ப்பு – தவறு 
பயிற்சி, முயற்சி, வேட்கை, மீட்பு – சரி 

குறிப்பு  41 
இருவகையாய் எழுதக்கூடிய  சொற்களில் சில : 
பவளம் – பவழம் 
கோவில் – கோயில் 
மதில் – மதிள் 
உழுந்து – உளுந்து 
மங்கலம் – மங்களம் 

குறிப்பு – 42 
தண்ணீர் என்பது  தண் ( குளிர்ச்சிபொருந்திய) + நீர்.  எனவே தண்ணீர் என்றாலே குளுமையான நீர் 
என்றுதான் பொருள். இதற்கு எதிர்ப்பதமான சூடான நீர் –  வெந்நீர் என்பதே.  சுடுதண்ணீர் என்பது 
தவறான பிரயோகம். தண்ணீர், வெந்நீர் என்பதே சரியானது. 

குறிப்பு எண் – 43 
Oil என்பது எண்ணெய்.  எண்ணை என்று எழுதுவது தவறு. 
எண்ணெய்  என்பது எள்+ நெய். பிசுபிசுப்பான திரவம் எல்லாமே நெய். எள்ளிலிருந்து 
எடுக்கப்படும் நெய் – எண்ணெய்.  இந்த எண்ணெய் என்பது நாளாவட்டத்தில் ஒரு பொதுப் பெயராகி 
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணை என்றெல்லாம் காரணப்பெயர் மறைந்து புதிய பெயர்கள் உருவாகிவிட்டன. 
எண்ணை என்று எழுதுவது ‘எண்’ ( Number) ஐ குறிப்பதாகிவிடும். எட்டாம் எண்ணை இரண்டால் 
வகுத்தால் நான்கு என்று விடை வரும் என்பது போல. 
குறிப்பு எண்- 44 
ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல என்பது விதி 
உதாரணம்: இ

தங்கத்துரையரசியின் மூக்குத்தி சிறுகதையை முன் வைத்து-சோலைமாயவன்

கவிஞர் தங்கத்துரையரசி அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையை கையடக்கமான அளவில் பன்முக மேடை பதிப்பகம் வழியாக வெளியிட்டுக்கிறார்

வாழ்த்துக்கள் தங்கத்துரையரசி 

கதையின் தலைப்பு மூக்குத்தி

விடுமுறை நாளில் அம்மாச்சியின் வீட்டிற்கு வரும்  இளம்பெண்ணின் நீண்ட நாளாக மனதிற்குள் தேங்கிடக்கும் ஆசையான மூக்குத்தி போடவேண்டும் என்ற மையப்பொருளை கதையாக எடுத்திருக்கிறார்

மூக்குத்தி என்றவுடன் கண்ணதாசன் எழுதிய சிவப்புக் கல் மூக்குத்தி நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியவில்லை

          தன் அம்மாவின் ஊரான அம்மாச்சியின் வீட்டுக்கு வந்தவள் இரவு தூக்கம் வராமல் தவிக்கிறார் கூடவே பூனையின் சத்தமில்லாத நடை அந்த இருட்டுக்குள் பூனையின் கண்கள் அவளுக்கு மூக்குத்தியை நினைவுப்படுத்துவதாக கதை தொடங்குகிறது
               எந்த வயதில் மூக்குத்தி போடுகின்ற ஆசை வந்தது யாரெல்லாம் என்ன என்ன வண்ணங்களில் அணிகிறார்கள்
             பெரியம்மா ,அம்மா ,தன் சக தோழியின் மூக்குத்தி போட்ட பிறகு அவர்கள் அழகு கூடியிருப்பதும் அதே போன்று நமக்கு எவ்வகையான நிறத்தில் அணிந்துகொண்டால் இன்னும் பிரகாசிப்போம் என்ன நினைவுகளுடன் உறங்கிவிடுகிறாள் 

     விடிந்தது தன் தங்கையின் மீனுக்குட்டி அம்மாச்சியிடம் தனக்கும் மூக்குத்தி வேண்டுமென்று அடம் பிடிக்க அவங்க மாமா வரட்டும் என்று சொல்கிறாள் 
      இதன்  பிறகுகதை தாத்தா அம்மாச்சியின்  வாழ்க்கை குறித்து நகர்கிறது தாத்தாவின் வாழ்வு அவர் இறந்த பிறகு அம்மாச்சியின் நிலையை கதை விவரிக்கிறது
        தன் அம்மாச்சியியுடன்தானும் தங்கை  மீனுக்குட்டியும் மூக்குத்தி குத்துவதற்காக ஆசாரி வீட்டிற்கு செல்கிறார்கள்  அங்கே பிறகு நம் கதையின் நாயகி அந்த ஊசியை பார்த்துவிட்டு பயந்துகொண்டு வீட்டிற்கு ஓடிவந்துவடுகிறாள் 

  வீட்டிற்கு வந்தவள்  தன் தங்கையும் அம்மாச்சியும் எப்படி வருகிறார்கள் மறைந்துகொண்டு பார்க்கிறாள்
     வேப்பங்குச்சியை மூக்கில்அணிந்து சிரித்தபடி வருகிறாள் தங்கை என் கதை முடிகிறது

~~  தங்கத்துரையரசிக்கு  நன்றாக கதை சொல்ல வருகிறது தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்கலாம் அதில் உச்சம் தொடுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாவே காணப்படுகிறது
சான்றாக
ஒரு பத்தியை முன் வைக்கிறேன்

"எனக்கு அம்மாச்சி இடம் பிடிக்காததும் சில சமயம் பிடித்திருப்பதும் இந்த வாசனைதான் இத்தகைய வாசனைதான் அவளை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது அவளுக்கான அந்த நெடி மிகு வாசனைக்கு காரணமாக உள் மூக்கும் பொடியை அதற்காக மட்டுமே பிடிக்கிறது"
        இது போன்று கவித்துவமான நடையை  கதையெங்கும்  எழுதியிருக்கிறார்
 வாசகனை வேறேங்கும் கதையிக்குள் வாசகனை அமர வைத்துவிடுகிறது
      
சிறப்பான நடை அதற்காக இன்னோரு முறை வாசிக்கலாம் இந்த வேப்பங்குச்சியை அனைவருக்கும் பிடிக்கும்

அன்புடன் 
சோலைமாயவன்
22-09-23

Tuesday, September 19, 2023

சோலைமாயவன் கவிதை

வெக்கையாக இருக்கிறது அறை
வெக்கையாக இருக்கிறது வீடு
வெக்கையாக இருக்கிறது தெரு
வெக்கையாக இருக்கிறது ஊர்
வெக்கையாக இருக்கிறது நாடு
வெக்கைகளுக்குள்
மூழ்கி நீந்தி
தலைநீட்டுபவர்களின் 
நம்பிக்கை செவியில்
கேட்கிறது
நிரந்தர ராஜாவாக
தரித்துக்கொண்ட
நாயின் ஊளையிடுதல்...

                                 --சோலைமாயவன்

பிணத்தை எரித்து வெளிச்சம்-தொகுப்பும்-மொழிபெயர்ப்பும்-இந்திரன்-சோலைமாயவன்

மீள்பதிவு
~~~~~~£
நேற்று காதலர் தினத்திற்கு கிடைத்த பரிசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்பாதவன் சார் முகநூல் எழுதிய

"இளவரசனுக்கு ஓடும் ரயில்
சங்கருக்கு அரிவாள் வெட்டு
இன்னொருத்தன் எப்படி செத்தான்  ஜெயில்ல சொகமா இருக்குறவனுக்கு தான் தெரியும்
#காதலர் தினம் வாழ்க 
இந்தக் கவிதையோடு நேற்றைய நாள்  தொடங்கியது
 பிரியா அவர்கள் எழுதிய காலந்தி நாவலை வாசித்து முடித்தேன் 

எந்த விதமான கொண்டாட்டமான மனநிலை இல்லாமல் மனச்சோர்வுடன்  நாள் நகர்ந்தது

காலை பதினோரு மணிக்கு என் துணைவியார் போனில் அழைத்தார் இன்று நம்முடைய சிறப்பு தினம் எனக்கு எந்த பரிசும் இல்லையா என்றார்கள்

    வழக்கம் போல வருசம் வருசம் நான் தானே வாங்கி கொடுப்பேன் இந்த முறை நீ பரிசு கொடு என்றேன் அப்பொழுது சிறந்த பரிசாக நானே கிடைத்தப்பிறகு வேறென்ன வேண்டும் என்றாள்
  ஒருஅரை மணி நேரம் சிரித்துக் கொண்டேன்
சரி உங்களுக்கு என்ன தான் வேண்டும் என்றாள்
 காதலர் தினத்திற்காக கிடைத்த பரிசு

 இந்திரன் சார்  தொகுத்த 
பிணத்தை எரித்தே வெளிச்சம் என்ற இலக்கிய நூல்
புதிய வடிவத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீட்டு இருக்கிறது

குஜராத்தி-மராத்தி-தமிழ் மூன்று மொழிகளிலும் தலித் இலக்கிய அடையாளத்தின் படைப்புகள் இந்திரன் சார்  தொகுத்து இருக்கிறார்
 நான் தமிழ்ப்பகுதி மட்டுமே என் வாசிக்க முடிந்தது அது உங்கள் பார்வைக்காக

மொழியோ பழசு
கதையோ நைந்துவிட்டது
வெளிச்சக்கிரணம் மிகவும் மெலிது
எல்லாம் மங்கி தெரியும் இக்கணம்
சலனமற்று நாற்புறமும் அமைந்துவிட்டன
இன்று
பிணத்தை எரித்து வெளிச்சம்
                      -பாதல் சர்க்கார்

உங்களது கருப்புத் தோலை
உடலை மூடும் ஒரு அங்கியைப் போல்
அணியாதீர்கள்
அதனை போர்கொடியைப் போல்
உயர்த்திப் பிடியுங்கள்
             -லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்
ஆப்பிரிக்கா்களின் கருப்பு இலக்கியம் பற்றி ழான் பால்சார்த்தார் குறிப்பிடுகிறார் "இது இனவெறியை எதிர்க்கும் இனவெறி இதைபோன்று தான் தலித் இலக்கியம் சாதிஅடையாம் குறித்து பேசுகிறது என்று சொன்னால் அதன் இறுதி நோக்கம் சாதிமுறையை முழுமையாக ஒழிப்பது தான் சாதி ஒழிப்பதற்காக சாதி அடையாளம் தேவைப்படுகிறது

பல்வேறு வரலாற்று சான்றுடன் இந்த நூலுக்கான முன்னுரையை எழுதி இருக்கிறார் இந்திரன்
அவர்களின் இந்த முன்னுரையில் கடைசியில் நான் யார் என்ற கேள்வியொடு முன் வைத்து முடிக்கிறார் 

             ~அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தலித் என்ற  பதப் பிரயோகத்துடன் கூடிய அடையாளம் கொண்ட இலக்கிய முயற்சிகள் தமிழில் பெருகின

                ~ஈழத்தில் எழுத்தாளர் டானியல் தமிழகத்தில் பூமணி எழுதிய பிறகு நாவல்
1982ல் வெளிவந்த  இந்திரனின் அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தலித்துக்கள் போன்றே கருப்பர் இன விடுதலைக்கு  எப்படிஎழுதினார்கள் என்பது எடுத்துரைத்தது
தமிழிலக்கியத்தில் தலித் அடையாளங்களை அவருடைய படைப்புகளை கவிதைகளை இங்கே தொகுத்திருக்கிறார்

மாடு குளிப்பாட்டலாம் 
துணி அலசலாம்
சூத்தும் கழுவலாம்

நாங்கள் மட்டும்தான்
தண்ணி மொள்ளக்கூடாது

ரவிக்குமார் எழுதிய அது தவிர என தலைப்பிட்டஒரு கவிதையின் கடைசி வரி
இச்சமூகம் எவ்வளவு பெரிய துரோக்கத்தை இழைத்துஇருக்கிறார். விலங்குகளை கேவலமாக பார்க்கும் பார்வை என்னவென்று சொல்வது

பள்ளிக்கூடத்தில் பிணம் என்ற தலைப்பில் இந்திரனின் ஒரு கவிதை 

அறுத்துப் பார்க்கையில் 
எல்லா சாதியின்
மலக் குடலுக்கும் ஒரே நாற்றம்

எல்லார் உடம்பிலும் ஓடும் ரத்தம் கிகப்பு தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இக்கவிதை உன் உடலுக்குள்ளும் ஒரு அவமானமாக ஒரு மலக்குடல் வைத்திருக்கிறாயே நீ எப்படி இந்த உலகத்தில் என்னைவிட உயர்ந்தவன் என்று கேட்கிறாய் என்ற கேள்வி ஒரு புதிய கோணத்தை புதிய வெளிச்சத்தை புதிய பார்வையை இங்கே தந்திருக்கிறது

          ~ஒடுக்கப்பட்டவர்கள் எந்த பொது இடத்திலும் ஒரு தேனீர் கடை ஒரு மளிகைக் கடையும் வைத்திருக்கக்கூடாது அப்படி வைக்கின்ற போது அது ஒரு ஆதிக்க சாதிக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது அந்தக்கடையை அகற்றுவதில் எற்பட்ட பிரச்சனை அது  சேரி குடிசைகளையும்எரிக்கத் தொடங்குகிறது என்ற கருத்தை முன்வைத்து நீறுபூத்த என்ற சிறுகதையை எழுதி உள்ளார் காவலுர் ஜெகநாதன்

           ~அந்த சிறுகதையில்  "அடக்கத் துடிக்கும் சாதிவெறியர்களுக்கும் அடங்க மறுக்கும் உழைக்கும் கரங்களுக்கும் இடையே துவந்த யுத்தம்
 செல்லையர் கடை  எரிகிறது

பல நிமிடங்கள் பதட்டத்தில் கழிய…..

 ஊரின் வடபுறம் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின்  கிராமத்தை தீ தின்றது.

              ~எத்தனை முறை ஒலி நாடாவில் கேட்ட 
பாடல் தான்  வரி வடிவமாக இப்போதுதான் வாசிக்கிறேன்
 இந்த கவிதையை இன்குலாப் எழுதிய மனுஷங்கடா என்ற கவிதையை ஒவ்வொரு எழுத்துக்களுக்குள் ஒவ்வொரு வலி வலி

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே -ஒங்க
 சர்க்காரும் கோர்ட்டும் அதில் எண்ணெ ஊத்துதே
எதை எதையோ சலுகஐயின்னுஅறிவிக்கிறாங்க நாங்க 
எரியும்போது எவன் மசுரைப் புடுங்க போனீங்க

இக்கவிதையின் வரிகள் இன்றும் நம்  இன்றுகண்முன்னே இருக்கிறது அந்த காட்சிகள் மாற்றம் இல்லாமல் இருக்கிறன்றன
 கவிஞன் காலத்தின் கண்ணாடி 
இன்குலாப் அவர்கள்  காலத்தின் கண்ணாடி

           ~ராக்கமா பேத்தி என்ற தலைப்பில் டாக்டர் ராஜ்கௌதமன் ஒரு சிறுகதையை இதில்  இடம்பெற்று உள்ளது முழுக்க முழுக்க கிராமத்தில் இருக்கும் பாட்டிகள்(ஆயாக்கள்) ஏற்படும் துயரம் நிறைந்த வாழ்வும்
அந்த பாட்டிகள் ஆண்டைகளிடம் பட்ட அவமானத்தையும் துயரத்தையும் நம் கண்முன்னே நிற்கிறது

            ~தலித் கலை இலக்கியங்கள் என்ற தலைப்பில் டாக்டர் கே ஏ குணசேகரன் அவர்களுடைய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது
சங்கஇலக்கியம் தொடங்கி நாட்டுப்புற கலைகள்வழி தலித்கலைகள் தனித்த அடையாளங்கள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளதையும் ஒவ்வொரு கலைவடிவத்தில் நாம் எதிர்ப்புக் குரலை எவ்வாறு உள்ளே கொண்டு வருவது  என்பதையும் இந்த கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்

    ~குறவன் குறத்தி ஆட்டம் என்ற வடிவில்வருகின்ற ஒரு பாடல் இன்றைய காலத்திற்கு மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறது

அட எத்தனையோ புத்திகள
எடுத்துரைச்சுச்  சொன்னாலும்
நெத்தம் போய் குடிக்கிறியே
நீயும் ஒரு ஆம்பளையா -அட
ஒன்னோட என்னடா பேச்சு - சும்மா
ஒதுங்கிப் போடா.  சீச்சி

         ~ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக எதிர்க்குரல் எழுப்புவதாக தலித் படைப்புகள் விளங்கும் வகையில் இருக்க வேண்டும் என்று ஒரு படைப்பின் நோக்கத்தையும்
 டாக்டர் கே ஏ குணசேகரன் முன்வைக்கிறார்

      கே டானியல் எழுதிய கானல் என்ற சிறுகதையும் இதில் இடம்பெற்றுள்ளது

தேவாலயத்தில் பாவமன்னிப்பு கொடுக்கும் குருவானவர் இளையவனிடம் ஒவ்வொரு கேள்வி கேட்கிறார் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதில் சொல்கிறான் கடைசியாக
படகினி என்ற வார்த்தையை அவன் உச்சரிக்கிறார் அதன்பிறகு குருவானவர்
 இயேசு நாதர்முன்பு மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்கிறார்
 படகினி என்றால் வயிற்றில் நெருப்பு
பசிஎன்னும்  நெருப்பு இருக்கின்றபோது கடவுளும் தொழுகையும் ஒருவனுக்கு தேவையில்லை என்று கதை  முடிகிறது

     ~~சுகிர்தராணி அவர்களின் வீடு திரும்புதல் என்ற கவிதை

சிதையில் எரியும் பிணத்தின் விரைப்பென
எல்லோரும் கைதட்டுகிறார்கள்
மேடையை விட்டு
நாமிருவம் கீழிறங்குகிறோம்
வரிசை தப்பி  மக்கள் கலைகிறார்கள்
நீ ஊருக்குள் போகிறாய்
நான் சேரிக்குச் செல்கிறேன்

   வலி நிறைந்த சொற்களாக கவிதை
அந்தசொற்கள்  சமூகத்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது என்னதான் இருந்தாலும் நீ ஊர் நான் சேரி தானே  என்பதை சமூகத்தின் அவலத்தை சுட்டிக்காட்டுகிறார்

            ~ஆடுகளம் தலைப்பில் என் டி ராஜ்குமார் 
 எங்களுக்கு சொல்லித்தர
அடவும் தகுதியும் இல்லாத  துரோணா 
மீன்முள் வாளெடுத்து
 ஆமைத்தோடு கேடயம் செய்து
 செறுத்தடிக்கும்
 ஆயுதம் பிடிக்க தெரியாதவன் நீ

காலங்காலமாய் எல்லா கலைகளும் முன்னோடியாக இருந்தவன் ஆதிக்குடிகள் மக்கள் அவர்களுக்கு தான் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி சொல்லியே அவர்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு வைத்தார்கள் ஆனால் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற சொல்லவருகிறார் கவிஞர் என் டி ராஜ்குமார்

         ~பெயர் என்ற தலைப்பில்அன்பாதவனின்
கடவுளின் குழந்தைகள்
செல்லமாய் வருடிக்கொடுத்தனர் சிலர்.
ஆலயங்களுக்குள் நுழைய மறுக்கப்பட்ட எனக்கு உதவாதஆண்டவனின் பெயர் எதற்கு 

என்ற இந்தக் கேள்வியை முன்வைத்து என் பலம் மொழி உழைப்பு துணையாக இயற்கை  என் பெயரை மலைமுகடுகளில் எதிரொலிக்க எதிரொலிக்க கூறுவேன் என்று அந்த கவிதையை முடிக்கிறார்

அயோத்திதாசர் வாழும் பவுத்தம் என்ற தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய கட்டுரை ஒன்று நீண்ட அளவிலான ஒரு ஆய்வுக் கட்டுரையாக உள்ளது

கடைசியாக பெண்ணும் தலித்தும் என்ற தலைப்பிலான இந்திரன் எழுதிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது
தாழ்த்தப்பட்ட ஆண்கள் அனுபவிக்கும் கொடுமையை விட பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் மிக மிக அதிகம்
சாதி மாதம் அரசு குடும்பம் பொருளாதாரம் சட்டம் ஆகிய அனைத்து அதிகார மையங்களும் இவருக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக அணி திரண்டது உள்ளனஇதனால் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் ஒவ்வொரு தலித்துகளின் சிந்தனையிலும் என்றைக்கும் ஆறாத காயத்தை ஏற்படுத்தி உள்ளன
              ஒரு ஆயுதமாக இந்தத் தொகுப்பைத் தொகுத்து இருக்கும் இந்திரன் சாருக்கு அன்பும் நன்றி…..
      -சோலைமாயவன்

Monday, September 18, 2023

வெயில் மேயும் நீர்ப்புலி -விமர்சனம்

2023ஆண்டு சௌமா விருது பெற்ற கவிஞர் Thanappan Kathir  அவர்களின் பார்வையில்
வெயில் மேயும் நீர்ப்புலி கவிதைத் தொகுப்பு

-------------------------
நன்றி தோழர்

#வெயில்நீயும்நீர்ப்புலி...
#சோலைமாயவன்...

  கோவை மாவட்டம் சமத்தூர் வானவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறவர் கவிஞர் சோலை மாயவன். ஏற்கனவே இவர் மூன்று கவிதை தொகுப்புகளை வெளியிட்டு இருக்கின்றார். இது இவரது நான்காவது கவிதை தொகுப்பாக 
வெளி  வந்திருக்கின்றது.

   மக்களைப் புரிந்து கொள்கிற படைப்பு மனம் தன்னியல்பாக அவர்களை குறித்து சிந்திக்கிறது என்ற பதிப்புரை நம்மை நூலுக்குள் ஈர்த்துக் கொள்கிறது.

   'செத்தால் புதைக்கும் சுடுகாடு இரண்டு வஞ்சனை இல்லாமல் படரும் வெயில் மட்டும் ஒன்று' இதுபோன்ற வேறு சில வரிகளை மேற்கோளிட்டு ச.செல்லத்துரை வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார்.

   எளிய மனிதர்களின் வாழ்வியல் மீதான வன்முறைக்கான எதிர்கொள்ளாக இந்த நூல் இடம் பெறும் என்று புன்னகை கவிதை இதழ் ஆசிரியர் ரமேஷ் குமார் மற்றுமொரு வாழ்த்துரை நவின்றிருக்கிறார்.

   புறக்கணிப்பின் அவலத்தில் சிக்கிய மனிதர்களையும், அவர்கள் வாழ்வை எதிர்கொண்ட துணிவின் விலாசங்களையும் முன் வைக்கிற தொகுப்பாக இந்த தொகுப்பைக் கருதலாம். மாயவனின் எழுத்துக்கள் வர்ணங்களால் வனப்புகளால் வாழ்வியல் உண்மைகளைக் காணும் தரிசனத்தால் அழியா அழகாய் என்றும் ஓவியக்கோடுகளாய் நின்று நிலைக்கின்றன என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் அணிந்துரை தந்திருப்பது நூலுக்கு சிறப்பு.

  பொள்ளாச்சி இலக்கிய வட்டமும் கவிஞர் அம்சப்பிரியா, 
இரா. பூபாலன், புன்னகைப்பூ ஜெயக்குமார் அவர்களும் எவ்வாறு தூண்டுதலாக இருந்து தமது படைப்பு வெளிவர காரணமாக இருந்தார்கள் என்று தன்னுரையில்  நன்றி தெரிவித்திருக்கின்றார் சோலை மாயவன்.

   மறைந்து அல்லது மறைக்கப்படுகின்ற காவல் தெய்வங்களை கண்முன்னே நிறுத்துகின்ற வரிகள் இவை. எவ்வாறு நாம் புறக்கணிக்கப்பட்டோம்? ஏன் இன்னும் நமது காவல் தெய்வங்களை நாம் மறந்து தொலைகின்றோம்? என்ற வினாவினை தொடுக்கின்ற வரிகள் இவை. 

"கோவில் எதற்கு உனக்கு 
போடா என்றீர்கள் 
எங்கள் முப்பாட்டனனை வீச்சரிவாளுடன் 
முன் நிறுத்தினோம்"

   எத்தகைய அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து என்ன பயன்? கைபேசி தொடுதிரையில் உலகச் செய்திகள் அனைத்தும் வந்து குவிந்து விடுகின்றன. தொலைத்து விடுகின்ற அறிவியல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம்  இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுப் பாதைக்கு போராட வேண்டியிருப்பது குறித்த கவிதை இது.

"ஒரு செய்தியை நொடியில் உலகெங்கும் வியாபித்து விடுகிறோம் 
ஆள்காட்டி விரல் நகம் அளவே அறிவியல் தொழில்நுட்பம் சுருங்கி விட்டதென சிலிர்க்க சிலிர்க்கப் பேசுகிறோம்
.
.
அறிவியல் நுட்பத்தில் - வாழ்வை தொலைத்து விடுகின்றோம்
.
இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய 
சுடுகாட்டிற்கு பொதுப் பாதை கேட்டுப் போராடுகிறோம்"

என் சுவரெங்கும் கேள்வியின் ஆணைகள் 

   எத்தனை எத்தனையோ கேள்விகளை, விடை தெரியா கேள்விகளைக் கேட்கின்ற பலர் கேட்காத கேள்வி ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்.

" இதுவரை 
யாரும் கேட்டதில்லை 
என்ன புத்தகம் படிக்கிறீங்கனு"
எத்தகைய வலி மிகுந்த வரிகள் இவை.

   பட்டும் பட்டுப்போகாமலும் இருக்கின்ற மரம் பற்றிய கவிதை இது

"இடம் பெயராமல் நிற்கிறது அந்த மரம் 
பழுத்த இலைகள் உதிர்ந்து கால்கள் முளைத்து விடுகின்றன மரத்தின் உயிர் குடித்துத் 
துளிர்கள் பிறப்பெடுகின்றன 
நான் எதனின் சாயல் 
நகராத மரமா 
கால் முளைத்துப் பழுத்த இலைகளா 
உயிர் குடித்துப் பிறப்பெடுத்த துளிர்களா 
சொல் என் பீமா. 

நிறைவு வரிகளில் மேற்கோளிட்டிருக்கும் இதிகாச நாயகன் விடை தர தருவானா?

   எவ்வாறு அழித்து நமது வாழ்வியலை தொலைத்து நிற்கின்றோம். இவ்வாறு படிப்படியாக நாம் செய்கின்ற செயல்களை, அரசியல்வாதிகள் செய்கின்ற அவலங்களை பட்டியலிட்டுக் கொண்டே வந்து வயிற்றில் அடித்து வயிற்றில் அடிப்போரைக் கேட்க நாதி இல்லையா என்று புகார் தெரிவிக்கின்றார்.

"யாரிடம் புகார் கொடுப்பதென்று வயிற்றைக் கழுவுவதற்கே வாழ்வா சாவா போராட்டத்தில் சதா வயிற்றிலடிக்கிற அரசாங்கத்தின் மீது 
எப்போது போல எந்த புகாரும் இல்லை"

  மாரடித்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள்' என்ற வரிகளில் மூலம் ஊடகங்கள் கூக்குரல் இடுவதை வன்மையாக கண்டிக்கிறார். 

  'பனை விதைகளை கரையோரம் பதிய விட்டு கடலளவு மழை நீரை சேமிக்க' என்ற வரி மூலம் மழை நீர் பிடிப்பை நாம் எவ்வாறு தொலைத்து ஊருக்குள் தண்ணீர் புக வழி வகுத்தோம் என்பதனை சுட்டுகிறார்.

   பதவி மோகம் பித்து பிடித்து அலைய வைக்கின்ற நிலையில் இருப்போர் இனி இந்த வரிகளை கண்டு அஞ்சக்கூடும். 

"முதல் மரியாதைக்காக சண்டையிடும் 
உங்கள் அரியாசனத்தின் மீது காறி உமிழ்கிறது 
ஒரு நோய்க்கிருமி"

   ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற குறுங்கவிதைகள் வெகு அழகு.

"நிதானத்திற்கு 
திரும்புவதற்குள் 
நழுவியது 
காலடியில் கிடைத்த 
நதி"

"உன் வயலும் 
என் வயலும் 
முத்தமிட்டுக் கொண்டிருந்த சந்திப்பில் 
முளைத்திருந்தது 
எட்டு வழிச்சாலை"

"அதிகாரத்தில் இருப்பவர்களில் ஒருவர் கூடவா 
உழவனின் விந்துக்கு பிறக்கவில்லை"

"பச்சைய வயல் தாயின் வயிற்றில் குமட்ட குமட்ட ஊட்டப்படுகிறது செழிக்காத தார்ப்பால்"

"மலைகளை உடைத்து நிலங்களை பறித்து 
ஆறுகளை மறைத்து 
மனிதர்களை வெறுத்து போடப்படும் சாலைக்குப்
பசுமைச்சாலையென குறிப்பெடுக்கிறார்"

"அறுவடைக் காலம் 
கோடைக் காலம் 
எல்லாம் போய் 
சம்மர் ஹாலிடேவில் நிற்கிறாள் மகள்"

 பசியின் கொடுமையை உணர்ந்தவனே இத்தகைய வலி தருகின்ற வரிகளை எழுத இயலும்.

"சோறு என்ற ஒற்றைச் சொல்லுக்கு 
கசங்கிய ஆடையோடு 
காற்று வெளியேறிய பந்தென சுருண்டு கிடந்தான்"

  அனைத்து கவிதைகளும் சமூகச் சீர்கேடுகளை, இயற்கை வளங்களை தொலைத்து நாம் எவ்வாறு செயற்கை உலகில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனை சுட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஆசிரியருடைய நோக்கம் புதிய விடுதலை வேள்வியினை கவிதை கணைகளால் தொடுப்பது போன்று அமைந்திருப்பது சிறப்பு.

   சமூக அக்கறையின் பிம்பமாக ஆசிரியர் மிளிர்கிறார் என்று சொன்னாலும் அவரது கோணங்கள்  நமக்கு புதிய பாதையைத் தேடத் தூண்டுவதாக அமைகிறது.

#வெயில்நீயும்நீர்ப்புலி
#சோலைமாயவன்
#பொள்ளாச்சிஇலக்கியவட்டம்.
#பக்கங்கள் 120
#விலை )ரூ.120