Wednesday, June 16, 2021

தனுஜா-நூல் அறிமுகம்

தனுஜா

ஈழத்திருங்கையின் பயணமும் போரட்டமும்- சுயசரிதை   புத்தகத்தை முன் வைத்து........


~தனுஜாஒரு வெள்ளிநட்சத்திரம்


~~ஒரு திருநங்கையின் வாழ்க்கையை வாசிப்பதன் மூலம் உலக மனித சமூகத்தின்  வாழ்வியலை முழுவதுமாக புரிதலுக்கு உள்ளாகலாம்


-~~தன் வாழ்க்கை எவ்வித சமரமசமின்றியும்  அதே நேரத்தில் வாசகர்களுக்கு சொல்லும் விதத்தில் மிக மிக சிறப்பாக முன் வைத்துள்ளார்

~~தனுஜா வாழ்க்கை என்பது திருநங்கைகளுக்கும் மட்டுமல்ல சமூகத்தில் புறக்கணிப்பட்ட மக்களுக்கான கலங்கரை விளக்கம் என்றே சொல்வேன்

~~அன்புக்காக ஏங்கி பின்பு ஒவ்வொரு ஆணிடமும் ஏமாந்து தனுஜா மனம் உடையும்  சமயத்தில் வாசிப்பவர்களையும் மனம் உடைந்து போகிறது

~~மூத்த திருநங்கைகள் இளம் திருநங்கைகளை ஏமாற்றி பணம் பறிப்பதும் அவர்களை வலுகட்டாயமாக  பாலியல் தொழிலில் ஈடுப்படுத்துவதும் என அவர்களின் வாழ்க்கைகளிலும் ஆயிரத்தெட்டு துரோகம் வஞ்சனை பொறாமை குணங்கள் மேலோங்கி இருப்பதையும் அறிய முடிகிறது



~இந்த தன்வரலாறு நூலின் வழிய திருநங்கைகளின் பல்வேறு வாழ்வின் நிலைப்பாடும் அவர்களின் மனநிலையும் சமூகம் வழங்கிய அவமானங்களை புரிந்துகொள்ள முடிகிறது

~ஈழத்தில் பிறந்து தமிழ்நாட்டில் சிறிது காலம் வாழ்ந்து ஐரோப்பாவில் வாழும் ஒரு திருநங்கையின் வாழ்வியலை ஒரு தெளிந்த நீரோடையாக நம் முன் வைக்கிறார்

~தனுஜன்-தனுஜாவாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயலும் ஒவ்வொரு நாளும் கண்ணீரும் அடி எதையும் நிராகரிப்பும் இச்சமூகத்தின் அறிவற்று இருப்பதைக் காட்டுகிறது

~~தன் குடும்பம் உறவுகள் பள்ளிக்கூடம் வேலைதேடும் இடங்கள் பழகும் ஆண்களிடம் என தன் பெண்மையை உணர்வார்கள் என நம்பி கரையை நோக்கி மீண்டும் மீண்டும் வரும் அலையென துயரமே அவளைச் சூழ்ந்துக்கொள்ள  தன்னை தானே தேற்றி  கரையேறுகிறாள்

~~திருநங்கைகளின் உறவுமுறைகள் சடங்குகள் பாலியல் தொழிலாளியான கதைகள் வயதான பிறகு அவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை தன் வரலாறு வழியாக அறியமுடிகிறது

~~திருநங்கை குறித்தான பொதுபுத்தி எல்லா நாட்டின் ஆண்களிடத்தில் ஒரு மாதிரியாக இருக்கிறது

~~ஆணாக பிறந்து பெண்ணாக மாறுவதற்கு ஒவ்வொரு நாட்டிலும்  வெவ்வேறு சட்டதிட்டங்கள்

~~ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் பாலின மாற்று அறுவைசிகிச்சையும் அதனால் ஏற்படும் வலியும் துயரத்தையையும் சொல்லி மாளாதவை ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் திருநங்கைகளில் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாதவை

~~  புறக்கணிக்கப்பட்ட  திருநங்கைகளும் இச்சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை உணரும் காலம் தொடங்கிவிட்டது அவர்களுக்கு சக மனிதர்களுக்கு போலவே உரிமைகளும்  வழங்குவேண்டயது சமூகத்தின் கடைமை என்பேன்

~அனைவராலும் வாசிக்க வேண்டிய புத்தகம்

-அன்புடன்
 சோலைமாயவன்