நள்ளிரவில்
பிளம்கேக் கேட்டு அடம்பிடிக்கிறது குழந்தை
கனவில் வந்திருப்பாரா
இயேசு நாதர்
கனவில் வந்தவர்
ஒரு ஸ்ட்ராபெரி கேக்குடன்
வந்திருக்கலாம்
விடிந்த பின் வாங்கி வருகிறேனென்று
சமாதன வார்த்தைகள் புறம் தள்ளி
வெளிச்சத்திற்காக
வாசலை வேடிக்கைப் பார்க்கிறாள்
நான்
கிறிஸ்மதுஸ் தாத்தாவிற்காக
காத்திருக்கிறேன்
இருவரும் நம்பிக்கையையும்
ஈடேற வேண்டும்
No comments:
Post a Comment