தனிமையில் என் நிசப்பதங்கள்
பலியான பொழுதொன்றின் இறுதியில்
இறக்கைகளற்ற கடவுளின் தூதுவனாக
கண்ணிகளிலிருந்து எமை மீட்டெடுத்தாய்
என் கசப்புப் பக்கங்களை
எண்ணி எண்ணி பரிகாசங்களால்
என்
குருதியின் சுவை
ஊரெங்கும் நாற்றமெடுத்த நாளில்
தேன்கலந்த இறகுகளால்
என் மேனியில் தீட்டிச்சென்றாய்
ஒவியமொன்றை
ஆட்டுமந்தையாய்
களைத்திருந்த என் பாதங்களில்
உன் கருணைவிழிகளால்
தைலம் தடவி தடவி
உன் ஜெபிக்கும் மந்திரத்தில்
ஆவி பறக்கவிடுகிறாய்
ஒரே நாளில் உன் விரல்
வண்ணங்களால் என்னை வாழ்வின்
உச்சத்தில் அமர்த்தி துணையாய் நீயும்
என் வாழ்வின் அர்த்தங்களை
உன் விழியால் பார்க்கிறேன்
மாயா
No comments:
Post a Comment