Friday, September 22, 2023

தங்கத்துரையரசியின் மூக்குத்தி சிறுகதையை முன் வைத்து-சோலைமாயவன்

கவிஞர் தங்கத்துரையரசி அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையை கையடக்கமான அளவில் பன்முக மேடை பதிப்பகம் வழியாக வெளியிட்டுக்கிறார்

வாழ்த்துக்கள் தங்கத்துரையரசி 

கதையின் தலைப்பு மூக்குத்தி

விடுமுறை நாளில் அம்மாச்சியின் வீட்டிற்கு வரும்  இளம்பெண்ணின் நீண்ட நாளாக மனதிற்குள் தேங்கிடக்கும் ஆசையான மூக்குத்தி போடவேண்டும் என்ற மையப்பொருளை கதையாக எடுத்திருக்கிறார்

மூக்குத்தி என்றவுடன் கண்ணதாசன் எழுதிய சிவப்புக் கல் மூக்குத்தி நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியவில்லை

          தன் அம்மாவின் ஊரான அம்மாச்சியின் வீட்டுக்கு வந்தவள் இரவு தூக்கம் வராமல் தவிக்கிறார் கூடவே பூனையின் சத்தமில்லாத நடை அந்த இருட்டுக்குள் பூனையின் கண்கள் அவளுக்கு மூக்குத்தியை நினைவுப்படுத்துவதாக கதை தொடங்குகிறது
               எந்த வயதில் மூக்குத்தி போடுகின்ற ஆசை வந்தது யாரெல்லாம் என்ன என்ன வண்ணங்களில் அணிகிறார்கள்
             பெரியம்மா ,அம்மா ,தன் சக தோழியின் மூக்குத்தி போட்ட பிறகு அவர்கள் அழகு கூடியிருப்பதும் அதே போன்று நமக்கு எவ்வகையான நிறத்தில் அணிந்துகொண்டால் இன்னும் பிரகாசிப்போம் என்ன நினைவுகளுடன் உறங்கிவிடுகிறாள் 

     விடிந்தது தன் தங்கையின் மீனுக்குட்டி அம்மாச்சியிடம் தனக்கும் மூக்குத்தி வேண்டுமென்று அடம் பிடிக்க அவங்க மாமா வரட்டும் என்று சொல்கிறாள் 
      இதன்  பிறகுகதை தாத்தா அம்மாச்சியின்  வாழ்க்கை குறித்து நகர்கிறது தாத்தாவின் வாழ்வு அவர் இறந்த பிறகு அம்மாச்சியின் நிலையை கதை விவரிக்கிறது
        தன் அம்மாச்சியியுடன்தானும் தங்கை  மீனுக்குட்டியும் மூக்குத்தி குத்துவதற்காக ஆசாரி வீட்டிற்கு செல்கிறார்கள்  அங்கே பிறகு நம் கதையின் நாயகி அந்த ஊசியை பார்த்துவிட்டு பயந்துகொண்டு வீட்டிற்கு ஓடிவந்துவடுகிறாள் 

  வீட்டிற்கு வந்தவள்  தன் தங்கையும் அம்மாச்சியும் எப்படி வருகிறார்கள் மறைந்துகொண்டு பார்க்கிறாள்
     வேப்பங்குச்சியை மூக்கில்அணிந்து சிரித்தபடி வருகிறாள் தங்கை என் கதை முடிகிறது

~~  தங்கத்துரையரசிக்கு  நன்றாக கதை சொல்ல வருகிறது தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்கலாம் அதில் உச்சம் தொடுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாவே காணப்படுகிறது
சான்றாக
ஒரு பத்தியை முன் வைக்கிறேன்

"எனக்கு அம்மாச்சி இடம் பிடிக்காததும் சில சமயம் பிடித்திருப்பதும் இந்த வாசனைதான் இத்தகைய வாசனைதான் அவளை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது அவளுக்கான அந்த நெடி மிகு வாசனைக்கு காரணமாக உள் மூக்கும் பொடியை அதற்காக மட்டுமே பிடிக்கிறது"
        இது போன்று கவித்துவமான நடையை  கதையெங்கும்  எழுதியிருக்கிறார்
 வாசகனை வேறேங்கும் கதையிக்குள் வாசகனை அமர வைத்துவிடுகிறது
      
சிறப்பான நடை அதற்காக இன்னோரு முறை வாசிக்கலாம் இந்த வேப்பங்குச்சியை அனைவருக்கும் பிடிக்கும்

அன்புடன் 
சோலைமாயவன்
22-09-23

No comments:

Post a Comment