Sunday, September 17, 2023

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 111 நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது இக்கூட்டத்தில் ச.ப்ரியா அவர்களின் அனலிக்கா நூல் எழுத்தாளர் இரா. முருகவேள் வெளியிட ச.ப்ரியாவின் தாயார் தமயந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் 

 ச.ப்ரியா அவர்களின் கவிதைத் தொகுப்புக் குறித்து மிக தீவிரமான பார்வையோடு கவிஞர் 
கலைகோவன் அறிமுகம் செய்தார்

 அடுத்தபடியாக கவிஞர் இரா. கவியரசு எழுதிய மாய சன்னதம் கவிதை குறித்தான கட்டுரை நூல் கவிஞர் க.அம்சப்ரியா அவர்கள் நூலில் அட்டைப்படம் குறித்தும் இதில் உள்ள கட்டுரைகள் ஆசிரியர் குறித்தும் அந்தக் கவிதையை எவ்வாறு தன் வாழ்வினோடு பொருத்தி வெளிப்படுத்தி உள்ளார் என்பதை மிக நுட்பமான பார்வையோடு அறிமுகம் செய்து வைத்தார் நூலின் ஆசிரியர் கவியரசு அவர்கள் ஏற்புரை வழங்கினார்

சிறப்பு நிகழ்வாக எழுத்தாளர் இரா. முருகவேள்அவர்கள் தன்னுடைய படைப்பு அனுபவம் குறித்து உரையாற்றினார்

 இனிவரும் காலங்களில்எவ்வாறு எழுத வேண்டும் என்ற உரையாடலைத் தொடங்கினார் 
இலக்கியங்களில் புதிய புதிய முயற்சி செய்பவர்கள் காலத்தால் நிற்கிறார்கள் யாரோ ஒருவர் பின் செல்கின்றவர்கள் முகம் தெரியாமல் காணாமல் போகிறார் 

ஒவ்வொரு படைப்புக்கும் தீவிரமான தேடலும் மெனக்கடலும்  தேவைப்படுகிறது

அவை இல்லாத பட்சத்தில் அந்த படைப்பு பத்தோடு பதினொன்றாக எடை போட்டுப்பார்க்கப்படுகிறது

படைப்பு என்பது சமூகத்தை விசாரணைக்கு உட்படுத்துகின்ற போது அது காலத்தில் நிற்கப்படுகிறது 

 தன் சுயத்தை குறித்து பேசுகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் நகர முடியாமல் தேங்கி போகிறார்கள் 

 புதிய படைப்பாளர்கள் இனிவரும் காலங்களில் இதுவரை இருந்த விதிமுறைகளை உடைத்து எழுத வேண்டும் எழுதுகின்ற போது அது முதல் நூலாகவும் இருக்கும் அது சிறப்பானதாகவும் இருக்கும்

எதைக் குறித்து எழுதினாலும் அது சுவாரசியமாகவும் உண்மைத்தன்மையாகவும் பொய் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்  காலத்திற்கு வேண்டிய படைப்பாக இருக்கும் பிறருடைய விமர்சனத்திற்காக எழுதுபவர்கள் அல்லது புகழுக்காக எழுதுபவர்கள் அல்லது இந்த வகை சாயலை பின்பற்றுபவர்கள் நிற்காமல் போவார்கள் எனவே புதிய படைப்பாளர்கள் தன் படைப்புக்காக அதிகம் உழைப்பு கொடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டும்
  

அன்புடன்
சோலைமாயவன்

1 comment:

  1. சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

    ReplyDelete