Saturday, October 21, 2023

கூடல் தாரிக் கவிதையை முன் வைத்து

நமக்குத்தான்
கள்ளிச்செடி
பாலை நிலத்துக்கு
அதுதான் ரோஜா 
            ---கவிஞர் கூடல் தாரிக்
நிலவென்னும் நல்லாள் கவிதைத்தொகுப்பிலிருந்து 

--மூன்றாவது முறையாக வாசிக்கும் பொழுது வாசிக்கும் பொழுது இந்த கவிதை என் மனதை தைத்தது

--எல்லா பூக்களையும்  எல்லோரும் ரசிப்பதில்லை ஆனால்  எல்லா பூக்களையும் ரசிப்பதற்கும் ஒருவர் இருக்கதான் செய்கிறார்கள்

--இவ்வுலகில் சகல ஜீவராசிகள் வாழ்வதற்கான உரிமை இடம் உண்டு 

-எளிமையான வார்த்தைகள் தான் என்ற போதும்  மனிதர்களுக்கு தன்னம்பிக்கை தருகிற ஒரு கவிதையாக பார்க்கிறேன்

- நிறத்தால்/ சாதியால் /பணத்தால்/ அதிகார திமிரால்/நாம் புறக்கணிக்கப்படுகின்ற போது இந்த கவிதை நமக்கான ஒரு கிரியா சக்தியாக இயங்குகிறது

நாம் பணியாற்றும் அலுவலகங்களில்/நாம் பயணிக்கும் சமுதாயத்தில்/ யாருக்கும் நம்மை எதன் பொருட்டும்பிடிக்காமல் போகலாம் ஆனால் நம் வீட்டிற்கு நாம் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறோம் நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு கதாநாயகனாக தெரிகிறோம் 
பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் யாரோ ஒருவருக்கு பயனுடையதாகவும் வாழ
நேருகிறது

--உதாசீனப்படுத்துவதும் அவமானப்படுத்துவம் பிறரால் புறக்கணிக்கப்படுவதும் மனித வாழ்வின் இன்னொரு பக்கம் அதற்காக நாம் வாழ்வை இழந்துவிடகூடாது என்பதை இந்தக் கவிதை முன்வைக்கும் ஒளி

         ---சோலைமாயவன்

No comments:

Post a Comment